Microsoft நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறும் வேலைகள் – விவரங்களுடன் ஆய்வு தகவல்!

0
Microsoft நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறும் வேலைகள் - விவரங்களுடன் ஆய்வு தகவல்!
Microsoft நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறும் வேலைகள் - விவரங்களுடன் ஆய்வு தகவல்!
Microsoft நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறும் வேலைகள் – விவரங்களுடன் ஆய்வு தகவல்!

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அதிகளவு ஊதியம் கொடுக்கப்படுவது வழக்கமானது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உள்ள பணியிடங்கள், அதற்கான ஊதிய விவரங்கள் குறித்த விளக்கங்களை ஆய்வு தகவல் விரிவாக விளக்கியுள்ளது.

ஊதிய விவரம்

பொதுவாக ஒரு தரம் வாய்ந்த நிறுவனங்களில் வேலை கிடைப்பது என்பது ஒரு சவாலான காரியமாகும். ஆனால் அதுவே ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பொருத்தளவு இது சற்று கடினமான செயல்முறை தான். ஏனென்றால் உலகளவில் தனது சேவைகளை செயல்படுத்தி வரும் இவ்வகை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது என்பது சாதாரண விசயம் அல்ல. அதற்காக பல திறமைகள், தகுதிகள் அவசியமாகும். அந்த வகையில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை செய்து வரும் ஊழியர்களின் தகுதி, ஊதிய விவரம் குறித்த தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

‘பட்டிமன்ற புகழ்’ பாரதி பாஸ்கருக்கு மூளையில் அறுவை சிகிக்சை!

இது தொடர்பாக பிசினஸ் இன்சைடரின் ஒரு அறிக்கை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் எவ்வகையான வேலைகள் அதிகளவு சம்பளத்தைப் பெறுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிறுவனங்களில் H1-B விசா மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது, சம்பளம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியமாகும். இது தொடர்பாக பிசினஸ் இன்சைடர் நிறுவனம், கடந்த 2020 இல் வெளிநாட்டு பணியாளர் விசாவில் 1,400 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பகுப்பாய்வை மேற்கொண்டது. அந்த அறிக்கையின்படி, பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மிக உயர்ந்த சம்பளம் பெறும் ஒரு பதவியாக விற்பனை மேலாளர் கருதப்படுகிறது.

இப்பணியில் ஒரு மேலாளர் சம்பாதித்த சம்பளம் அமெரிக்க டாலர் கணக்கில் சுமார் $ 250,000, இந்திய மதிப்பில் ரூ 1.83 கோடி ஆகும். மேலும், இது மைக்ரோசாப்டில் விற்பனை மேலாளரின் சராசரி சம்பளம் அல்ல, ஆனால் அதிக ஊதியம் பெறும் ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொடர்ந்து விற்பனை மேலாளர்கள் தவிர, மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் மைக்ரோசாப்டில் அதிக ஊதியம் பெறும் வேலைகளில் உள்ளனர். இந்த இரண்டு வேலைகளுக்கும் கொடுக்கப்படும் சம்பளம் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

எனினும் இந்த புள்ளிவிவரங்கள் 2020 க்கான பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவை அடிப்படையாகக் கொண்டதாகும். தவிர மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் சம்பள அமைப்பு பெரும்பாலும் பங்கு விருப்பங்கள் மற்றும் போனஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது மைக்ரோசாப்டின் சம்பளம் எவ்வளவு போட்டித் தன்மை வாய்ந்தது என்பதை அறிக்கை தெளிவுபடுத்துகிறது. அதாவது மைக்ரோசாப்ட்டின் உள் கணக்கெடுப்பின்படி, 55% ஊழியர்கள் தங்கள் சம்பளம், போனஸ் தொகை மற்ற நிறுவனங்களில் மேற்கொள்ளும் அதே பணிக்கு கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!