கொரோனாவால் உயிரிழக்கும் GDS ஊழியரின் வாரிசுக்கு பணி – அஞ்சல் தலைமையகம் அறிவிப்பு!
அஞ்சல் துறையில் பணிபுரிந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு 2 மாதங்களுக்குள்ளாக பணி நியமனம் செய்யப்படும் என அஞ்சல் துறையின் தலைமையகம் அறிவித்துள்ளது.
வாரிசு பணி:
கொரோனா 2 ஆம் அலை நோய் தடுப்பு பணியில் மாநிலங்கள் தோறும் முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வந்த பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி உட்பட பல சலுகைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் அறிவித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா காரணமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுகளுக்கு அஞ்சல் துறையில் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் துறை தலைமையகம் அளித்துள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக GDS ஊழியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிய மாற்றம் – ஐசிசி அறிவிப்பு!!
அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில், ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக CCE உடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவ முடிவு செய்யப்பட்டது. அதன் படி உயிரிழந்துள்ள GDS ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் குறித்து அடுத்த 2 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயா GDS இல்லாத தற்காலிக ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்அவர்களகன்நிலைமைஎன்ன அழர்கள்உயிரிழழந்தால் அ வள ர்களின்குடும்பம்சூழ்நிலை….???