50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிய மாற்றம் – ஐசிசி அறிவிப்பு!!

1
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிய மாற்றம் - ஐசிசி அறிவிப்பு!!
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிய மாற்றம் - ஐசிசி அறிவிப்பு!!
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிய மாற்றம் – ஐசிசி அறிவிப்பு!!

2027 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடர் ஐசிசி குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தற்போது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக கோப்பை:

இந்திய ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் தொடர் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் அதாவது வருகின்ற 2023ம் ஆண்டில் 50 ஓவருக்கான உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கவுள்ளது. இதனை தொடர்ந்து இன்று ஐசிசி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை மேற்கொண்டது.

TN Job “FB  Group” Join Now

ssc

அதில் 2027 மற்றும் 2031ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து ஆலோசித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இது குறித்து ஐசிசி கூறுகையில், வருகின்ற 2027 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்கும் என்று தெரிவித்தது. கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் (WFH) கவனத்திற்கு – சிறந்த உணவு பழக்க வழக்கங்கள்!

அதுமட்டுமல்லாமல் 2027 மற்றும் 2031ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலக கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்றையும் கொண்டு வரவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. சூப்பர் சிக்ஸ் சுற்று கடைசியாக 1999 மற்றும் 2003ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது இந்த அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த புதிய மாற்றம் 2023ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக கோப்பைக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!