JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

0
JIPMER பல்கலைக்கழகத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்!

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் NMHS Survey Coordinator பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.55,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பணிக்கான நேர்காணலில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் NMHS Survey Coordinator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email ID

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, NMHS Survey Coordinator பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

NMHS Survey Coordinator கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் Public Health, Psychology, Social work, Sociology, Rural Development பாடப்பிரிவில் Master டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் மார்ச்.26 ம் தேதி விடுமுறை அறிவிப்பு – அதிகாரப்பூர்வ தகவல்!

NMHS Survey Coordinator வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

NMHS Survey Coordinator சம்பளம்:  

இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.55,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

JIPMER தேர்வு முறை:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் 08.04.2024 அன்று நடைபெறவுள்ள Walk-in Recruitment (Written Test / Interview / Skill Test) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

NMHS Survey Coordinator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.04.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!