ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.19,600/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
புதுச்சேரியில் உள்ள JIPMER எனப்படும் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Nurse பதவிக்காக ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Junior Nurse |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது Junior Nurse பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடத்தை மட்டும் ஒதுக்கியுள்ளது.
JIPMER கல்வித்தகுதி :
- JIPMER யின் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12th / ANM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
Junior Nurse வயது வரம்பு :
இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பானது 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
JIPMER மாத ஊதியம் :
Junior Nurse பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,600/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
ஜிப்மர் தேர்வெடுக்கும் முறை:
- Written Exam
- Interview
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து 17-09-2021 க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.