JIPMER பல்கலைக்கழகத்தில் Data Entry வேலை தயார் – உடனே விரையுங்கள்..!

0

JIPMER பல்கலைக்கழகத்தில் Data Entry வேலை தயார் – உடனே விரையுங்கள்..!

தற்போது ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Data Entry Operator (DEO) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர் Data Entry Operator (DEO)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER DEO காலிப்பணியிடங்கள்:

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தற்போது Data Entry Operator (DEO) பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

கணினியில் 8000 Key Depression per Hour என்கிற வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கில மொழியில் நன்கு பேச மற்றும் எழுத தெரிந்திருப்பது அவசியமாகும்.

இத்துடன் MS Office மற்றும் தட்டச்சு (Lower / Higher) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

JIPMER DEO அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட Health / Hospital துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Data Entry Operator வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அவசியம் 28 வயதுக்கு மிகத்தவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

JIPMER DEO ஊதிய விவரம்:

இப்பணிக்கென்று தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பணியின் போது மாதம் ரூ.17,000/- ஊதிய தொகை பெறுவார்கள்.

Data Entry Operator தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

JIPMER DEO விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதள இணைப்பு மூலம் online விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்யவும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களையும் சேர்த்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 15.06.2022 ம் தேதி மாலை 05.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

JIPMER DEO Notification

JIPMER DEO Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!