Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் – Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சலுகை!

0
Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் - Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சலுகை!
Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் - Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சலுகை!
Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் – Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சலுகை!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகியவை பயனர்களுக்கான சில ரீசார்ஜ் திட்டங்களை Netflix, Prime Video அல்லது Disney+Hostar ஆகியவற்றுக்கான இலவச அணுகலுடன் வழங்குகிறது. இது குறித்த விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் ஒரு முன்னணி நிறுவனங்களாகும். இவற்றில் கொடுக்கப்படும் சில ரீசார்ஜ் திட்டங்கள் பயனர்களுக்கு OTT நன்மைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சலுகைகளை வழங்குகின்றன. அந்த வகையில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ அல்லது டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்கான இலவச அணுகலை வழங்கும் ஜியோ, ஏர்டெல் அல்லது வோடாபோன் தரும் ரீசார்ஜ் திட்டங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வீடு தேடி வரும் வேலைவாய்ப்பு – கூட்டுறவுத்துறை அமைச்சர்!

இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச கால்ஸ் செயல்பாடுகளையும் அளிக்கிறது. இதன் கீழ் முதலாவதாக, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டம், இது மொத்தம் 75 GB டேட்டாவுடன் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டேட்டா தீர்ந்துவிட்டால், நீங்கள் ஒரு ஜிபிக்கு ரூ.10 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தினசரி 100 SMS உடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்ஸ் நன்மைகள் அளிக்கப்படுகிறது. இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் பிறவற்றிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு இலவச நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாக்களும் கிடைக்கும். அதாவது பயனர் ஒருவர் மை ஜியோ செயலி மூலம் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ஹாட்ஸரை செயல்படுத்தலாம். மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாக்களை அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களுடனும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ரூ .399, ரூ .599, ரூ .799, ரூ .999 மற்றும் ரூ .1,499 ஆகியவை அடங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை மட்டுமே தருகிறது, மேலும் நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ செயல்பாடுகள் கூடுதலாக தேவைப்பட்டால், நீங்கள் ஜியோ போஸ்ட்பெய்டுக்கு மாற வேண்டும். அதன் கீழ் ரூ.401 க்கான ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி, கூடுதல் 6 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவை கொடுக்கப்படும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. ஏர்டெலின் ரூ.499 போஸ்ட்பெய்ட் திட்டம், 75 ஜிபி மொத்த FUP தரவுடன் ரோல்ஓவர் வசதியையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடுகள், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்கிறது. ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு நெட்ஃபிக்ஸ் சந்தா கிடைக்காது. அதற்கு மாறாக பிரைம் வீடியோவை செயல்படுத்த வேண்டும். ஏர்டெலின் சில ப்ரீபெய்ட் திட்டங்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுக்கான அணுகல் கொடுக்கப்படுகிறது. ஏர்டெல்லின் ரூ .599 திட்டம், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ் உடன், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை 56 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் கொடுக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

நெட்ஃபிலிக்ஸ், பிரைம் வீடியோ அல்லது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூலம் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் வோடாபோன் பயனர்களுக்கு ரூ .499 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதில் 75 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் வசதியையும் அளிக்கிறது. இது தவிர அமேசான் பிரைம் வீடியோ, ZEE5, வி மூவிஸ் மற்றும் டிவி ஆப்ஸ் ஆகியவற்றின் இலவச அணுகலையும் இது வழங்குகிறது. அடுத்தாக ரூ.1,099 க்கான திட்டத்தில் ஒரு வருட இலவச நெட்ஃபிக்ஸ் பயன்பாடு, ஜீ 5 பிரீமியம், அமேசான் பிரைம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.

வோடாபோனின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பொறுத்தவரை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ 5 சந்தாக்களை மட்டுமே தருகிறது. எனவே, மற்ற இரண்டையும் நீங்கள் விரும்பினால், மேலே குறிப்பிட்ட திட்டத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வோடாபோனின் ரூ.401 க்கான ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், கூடுதல் 16 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் கொடுக்கப்பட்டு வருகிறது. தவிர வார இறுதி டேட்டா ரோல்ஓவர் அம்சத்துடன் கூடுதல் கட்டணம் இல்லாமல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபியையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!