JEE Main 2023 தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு வசதி அளித்த NTA – அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
JEE Main 2023 தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு வசதி அளித்த NTA - அதிகாரபூர்வ அறிவிப்பு!
JEE Main 2023 தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு வசதி அளித்த NTA - அதிகாரபூர்வ அறிவிப்பு!
JEE Main 2023 தேர்வில் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு வசதி அளித்த NTA – அதிகாரபூர்வ அறிவிப்பு!

2023 JEE Main தேர்விற்கான தேதிகள் சில நாட்களுக்கு முன்பாக NTA மூலம் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக மாணவர்கள் சந்தித்த பிரச்சனைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

JEE Main 2023:

தேசிய தேர்வு முகமை நாட்டில் உள்ள மத்திய அரசின் பொறியியல் பல்கலை மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான JEE நுழைவு தேர்வை நடத்தி வருகிறது. இதனை வைத்து சில தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், JEE Main 2023 தேர்வு ஜனவரி மாதம் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், இதற்கான விண்ணப்ப பதிவில் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 12ம் வகுப்பில் உள்ள மாணவர்கள் 2021ம் ஆண்டு 10ம் வகுப்பில் இருந்தனர். அப்போது, கொரோனா பெருந்தொற்று அதிக வேகத்தில் பரவியதால், பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று தான் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

தமிழக பள்ளிகளுக்கான முக்கிய உத்தரவு – ஜன.1 முதல் வருகை பதிவு முறையில் மாற்றம்!

Exams Daily Mobile App Download

இதனால், தற்போது தமிழக மாணவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், JEE தேர்வுக்கு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவிட விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை கடிதம் அனுப்பினார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை தமிழக மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்ணை உள்ளிட விலக்கு அளித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!