ஜே.இ.இ தேர்வுகளுக்கான பயிற்சி தொடக்கம்- மத்திய கல்வித்துறை அறிவிப்பு!!

0
ஜே.இ.இ தேர்வுகளுக்கான பயிற்சி தொடக்கம்- மத்திய கல்வித்துறை
ஜே.இ.இ தேர்வுகளுக்கான பயிற்சி தொடக்கம்- மத்திய கல்வித்துறை
ஜே.இ.இ தேர்வுகளுக்கான பயிற்சி தொடக்கம் – மத்திய கல்வித்துறை அறிவிப்பு!!

நாடு முழுவதும் ஐ.ஐ.டி.,யில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வினை தேசிய தேர்வு முகமை சார்பாக நடத்தப்படுகிறது.தேர்வுக்கான பயிற்சிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்வுக்கான பயிற்சி வருகிற ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜேஇஇ தேர்வு பயிற்சிகள்:

நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தற்போது அடுத்த ஆண்டு 4 கட்டமாக தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஜேஇஇ மெயின் 2021 இன் முதல் கட்ட தேர்வு பிப்ரவரி 22 முதல் 25 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்வு பிப்ரவரி 2021 இல் நடைபெறும், அடுத்த மூன்று அமர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2021 இல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.இந்த தேர்வு 13 மொழிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?- மூத்த கல்வித்துறை அதிகாரி விளக்கம்!!!

இந்த தேர்வினை விண்ணப்பிக்கும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சியை அரசே வழங்கவுள்ளது. அடுத்த ஆண்டு நடத்தப்படும் தேர்வுக்கு வருகிற ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கபட உள்ளன .பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய கல்வித்துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!