ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியல் – ஜடேஜா முன்னேற்றம்!!

0
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியல் - ஜடேஜா முன்னேற்றம்!!
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியல் - ஜடேஜா முன்னேற்றம்!!
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியல் – ஜடேஜா முன்னேற்றம்!!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையிலும் தற்போது ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா:

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வருகிறது. சொந்த மண் மற்றும் வெளிநாட்டு மைதானங்களில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றி முத்திரை பதித்து வருகிறது. இதனால் தற்போது இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 18ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை விளையாட உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!!

இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முன்னேற்றம் கண்டுள்ளார். இவர் காயம் காரணமாக கடந்த சில டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை. இருந்தும் தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு காரணம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் களமிறங்காதது என்று கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இரண்டாவது இடத்தை பிடித்த ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆல் ரவுண்டர் டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் 4வது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி 6 வது இடத்தை இந்திய அணியின் ரிஷாப் பாண்ட் உடன் பகிர்ந்துள்ளார். மேலும் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் அஸ்வின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!