இஸ்ரோவில் இளம் விஞ்ஞானி பயிற்சி 2020 – தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

0

இஸ்ரோவில் இளம் விஞ்ஞானி பயிற்சி 2020 – தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பானது 2019 ஆம் ஆண்டு முதல் பள்ளி குழந்தைகளுக்காக “இளம் விஞ்ஞானி திட்டம்” “யுவ விக்யானி கரியக்ரம்” என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் இரண்டாவது அமர்வு 2020 மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் மே மாதம் 11 முதல் 22 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது . இதற்கான விண்ணப்பதிவு இணையத்தளத்தில் பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 24 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள், அதாவது தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் ஆர்வம், கல்வி திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சிகள் நடைபெறும் இடங்கள்:

அகமதாபாத், பெங்களூர், ஷில்லாங் , திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரம் இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து பயிற்சிகள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் என்ற https://www.isro.gov.in/ இணையத்தளத்தில் விண்ணப்பம் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

Download ISRO Young Scientist Programm Pdf

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!