IPL திருவிழா ஆரம்பம் – CSK vs MI : பழி தீர்க்குமா தோனியின் படை? நேருக்கு நேர் & உத்தேச 11 அணி!

0
IPL திருவிழா ஆரம்பம் - CSK vs MI : பழி தீர்க்குமா தோனியின் படை? நேருக்கு நேர் & உத்தேச 11 அணி!
IPL திருவிழா ஆரம்பம் - CSK vs MI : பழி தீர்க்குமா தோனியின் படை? நேருக்கு நேர் & உத்தேச 11 அணி!
IPL திருவிழா ஆரம்பம் – CSK vs MI : பழி தீர்க்குமா தோனியின் படை? நேருக்கு நேர் & உத்தேச 11 அணி!

ஐபிஎல் 2021 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

ஐபிஎல் போட்டிகள்:

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இடையேயான மோதலுடன் மீண்டும் தொடர் தொடங்குகிறது. இந்த பரபரப்பான போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் 07:30 PM மணியளவில் தொடங்குகிறது.

IPL திருவிழா 2021: பேட்டிங், பௌலிங் இவர்கள் தான் இப்போ வரை டாப்! முழு அலசல்!!

ஐபிஎல் 2021 புள்ளிகள் அட்டவணையில் எம்ஐ தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சிஎஸ்கே வெற்றியுடன் தொடரை தொடங்க வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இந்தியா, பாகிஸ்தானை போன்று உள்ளன. எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே மூன்று பட்டங்களை வென்றுள்ள நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான எம்ஐ இதுவரை ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது. இரு அணிகளும் 32 ஐபிஎல் போட்டிகளில் எம்ஐ 19 முறை வெற்றியும், சிஎஸ்கே இதுவரை 13 முறையும் வென்றுள்ளன. கடந்த ஆறு போட்டிகளில், நடப்பு சாம்பியனான மும்பை ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி போட்டியில் கியரான் பொல்லார்ட் 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேஸிங்கில் சாதனை படைத்ததை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டர்.

உத்தேச 11 அணி:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாக்கூர், லுங்கி நிகிடி, தீபக் சாஹர்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கே பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!