IPL 2021: RR vs MI – டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! பவுலிங் தேர்வு!!

0
IPL 2021 RR vs MI - டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! பவுலிங் தேர்வு!!
IPL 2021 RR vs MI - டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! பவுலிங் தேர்வு!!

IPL 2021: RR vs MI – டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! பவுலிங் தேர்வு!!

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 51வது லீக் போட்டியில் இன்று (அக்டோபர் 05) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சையில் இறங்க உள்ளன. ஏற்கனவே சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் அடுத்தகட்ட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. இந்நிலையில் பிளே ஆப்பிற்கான கடைசி இடத்திற்கான போட்டியில் ராஜஸ்தான், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 14 முறையும், ராஜஸ்தான் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி கிட்டத்தட்ட வெளியேற வேண்டியது தான். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்த தொடரின் முதற் கட்ட போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு ராஜஸ்தான் இன்று பழி தீர்த்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டி ஆனது ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி நடைபெறும் இம்மைதானம் பெட்டிங்கிற்கு சிரமம் கொண்டது.

ஆடும் லெவன் விவரம்:
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, ஷ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா
  • மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா (இ), இஷான் கிஷன் (வார), சூர்யகுமார் யாதவ், சauரப் திவாரி, கீரான் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!