IPL 2021: RCB vs PBKS – பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!!

0
IPL 2021 RCB vs PBKS - பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!!
IPL 2021 RCB vs PBKS - பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!!

IPL 2021: RCB vs PBKS – பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் குவித்துள்ளது. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து களமிறங்க உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 165 ரன்கள் இலக்கு:

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். பஞ்சாப் பந்து வீச்சை சமாளித்து ஸ்கோரினை உயர்த்த இருவரும் நிதானமாக விளையாடினர்.

IPL 2021 – RR vs CSK: ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது!

ஆனால் ஹென்றிக்ஸின் ஒரே ஓவரில் விராட் கோஹ்லி 25 ரன்களில் (24 பந்துகள், 2 பவுண்டரி, 1 சிக்ஸர்) மற்றும் டேனியல் கிறிஸ்டியன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் தன் பங்கிற்கு 40 ரன்கள் (38 பந்துகள், 4 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து வெளியேறினார்.

சற்று நேரம் களத்தில் அதிரடி கட்டிய டிவில்லியர்ஸ் 23 ரன்களில் (18 பந்துகள், 1 பவுண்டரி, 2 சிக்ஸர்) ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் வான வேடிக்கை கட்டிய மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதி ஒவரில் மிரட்டிய ஷமி 8 ரன்களை குடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னிங்ஸ் முடிவில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹர்ஷல் படேல் 1 ரன்னுடனும், பாரத் ரன் ஏதுமின்றியும் உள்ளனர்.

பஞ்சாப் தரப்பில் ஷமி மற்றும் ஹென்றிக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!