IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா மும்பை இந்தியன்ஸ்? இன்று டெல்லியுடன் மோதல்!

0
IPL 2021 பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா மும்பை இந்தியன்ஸ் இன்று டெல்லியுடன் மோதல்!
IPL 2021 பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா மும்பை இந்தியன்ஸ் இன்று டெல்லியுடன் மோதல்!

IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்குமா மும்பை இந்தியன்ஸ்? இன்று டெல்லியுடன் மோதல்!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் கோதாவில் மல்லுக்கட்ட உள்ளன. இன்றைய போட்டியில் மோதவுள்ள இரு அணிகள் பற்றிய அலசல் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து இப்பதிவில் காணலாம்.

MI vs DC இன்று மோதல்:

ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள 46வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. பலம் பொருந்திய டெல்லி அணி துவக்கத்தில் இருந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு உள்ளாகவே வலம் வரும் அவ்வணி ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை அடைந்து விட்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அதிகப்படியாக அதிகாரப்பூர்வமாக அடுத்த கட்டத்திற்குள் சென்று விடும்.

IPL 2021 – KKR vs PBKS: 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

கொல்கத்தாவிற்கு எதிரான கடந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பந்து வீச்சு ஓரளவிற்கு எடுபட்ட போதும் பேட்டிங் மோசமாக இருந்தது. பெரிய ஸ்கோரினையும் விரட்டி பிடித்த டெல்லி பேட்டர்கள் தற்போது தடுமாறி வருவது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும். இன்றைய போட்டியில் அதனை சரி செய்தால் வெற்றி பெறுவது சுலபம். பலம் பொருத்திய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசன் தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்கு பின்னர் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

அசுர பேட்டிங் பலம் கொண்ட மும்பை அணியில் ரோஹித், டி காக், சவுரப் திவாரி தவிர மற்றவர்கள் சொதப்புவது பெரும் பின்னடைவாக உள்ளது. பந்து வீச்சில் பும்ராஹ், பவுல்ட், ராகுல் சஹார் அசத்தி வருகின்றனர். இன்றைய போட்டியில் பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் ஜொலித்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். மும்பை அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற வாழ்வா? சாவா? கட்டத்தில் உள்ளதால் இன்றிய போட்டியில் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும்.

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு உதவும் என்றாலும், பந்து வீச்சு தான் அதிக அளவில் எடுபடுகிறது. எனவே இன்றைய போட்டியில் பெரிய ஸ்கோர் குவிக்க பேட்டர்கள் சிரமப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் இதுவரை 29 முறை மோதியுள்ளது. அதில் மும்பை அணி 16 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. டெல்லி அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

உத்தேச 11 அணி விவரம்:
  • மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா (c), குயின்டன் டி காக் (wk), சூர்யகுமார் யாதவ், சauரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா
  • டெல்லி கேபிட்டல்ஸ் – லோகேஷ் ராகுல் (c & wk), மயங்க் அகர்வால் / மன்தீப் சிங், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்பிரீத் பிரார், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!