IPL 2021: KKR vs DC – 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!!

0
IPL 2021 KKR vs DC - 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!!
IPL 2021 KKR vs DC - 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!!

IPL 2021: KKR vs DC – 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா அசத்தல் வெற்றி:

கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்தது டெல்லி கேபிட்டல்ஸ். தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீவன் ஸ்மித், தவான் இருவரும் நிதானமாக விளையாடினர். இதில் ஸ்மித் 39 ரன்கள் (34 பந்துகள், 4 பவுண்டரி) மற்றும் தவான் 24 ரன்கள் (20 பந்துகள், 5 பவுண்டரி) குவித்தனர். ஆனால் அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் (1), ஹெட்மியர் (4), லலித் யாதவ் (0), அக்ஸர் (0), அஷ்வின் (9) வரிசையாக வெளியேறினர்.

கேப்டன் ரிஷாப் பண்ட் 39 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 127 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் லோக்கி பெர்குசன், நரேன், வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 128 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் 30 ரன்கள் மற்றும் வெங்கடேஷ் ஐயர் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 9 ரன்களுடனும், கேப்டன் இயோன் மோர்கன் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். தன் பங்கிற்கு 21 ரன்கள் சேர்த்து சுனில் நரின் ஆட்டமிழந்தார். பொறுப்பாக விளையாடிய ராணா 36 ரன்கள் (27 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து கடைசி வரை ஆட்டமில்லாமல் களத்தில் இருந்தார்.

முடிவில் கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட்டும், அன்ரிச் நார்ட்ஜே, ரவிச்சந்திரன் அஷ்வின், லலித் யாதவ், ககிசோ ரபாடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி அடுத்த சுற்ற வாய்ப்பில் நீடிக்கிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!