வங்கிக்கு செல்லாமல் புதிய SBI கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!

0
வங்கிக்கு செல்லாமல் புதிய SBI கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் - முழு விவரம் இதோ!
வங்கிக்கு செல்லாமல் புதிய SBI கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் - முழு விவரம் இதோ!
வங்கிக்கு செல்லாமல் புதிய SBI கணக்கு தொடங்கும் வசதி அறிமுகம் – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் மக்களுக்கு பல சேவைகளை வழங்கும் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் kyc மூலமாக வங்கி கணக்கை திறக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

SBI புதிய அறிமுகம்:

SBI எனப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில் ஏகப்பட்ட மக்கள் வங்கி கணக்கை தொடங்கி பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்த வங்கி இருக்கிறது. பொதுவாக வங்கிகளில் கணக்கு தொடங்குவது முதல் சேவைகளை பெற அங்கே சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து தங்களது நேரத்தை மிச்சப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் தற்போது SBI வங்கிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் புதிய கணக்கு தொடங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வீடியோ KYC மூலம் வங்கி கிளைக்கு செல்லாமல், எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் பயனர்கள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய கணக்கு தொடங்க ஆதார் விவரங்கள் மற்றும் பான் கார்டு இருந்தால் போதும், மேலும் எஸ்பிஐ வங்கியில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு தொடங்கிய பின் வங்கி வாடிக்கையாளருக்கு ரூபே கிளாசிக் கார்டு வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

இப்படி ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு திறக்கும் வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி மூலம் 24*7 வங்கி வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்எம்எஸ் வசதி, எஸ்பிஐ விரைவு மிஸ்டு கால் வசதி, இன்டர்நெட் பேங்கிங் சேனல் மூலம் கணக்குகளை மாற்றும் வசதி ஆகிய வசதிகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கணக்கை திறப்பவர்களுக்கு காசோலைப் புத்தகம் வழங்கப்படாது. மேலும் வங்கிகளில் டெபிட்/வவுச்சர் பரிவர்த்தனை அல்லது கையெழுத்து அடிப்படையிலான பிற சேவைகள் கிடைக்காது. அவ்வாறு இந்த சேவைகள் தேவை என்றால் தேர்வு செய்த கிளைக்கு சென்று விண்ணப்பித்தால் காசோலைப் புத்தகம் மற்றும் பாஸ்புக் வழங்கப்படும்.

புதிய கணக்கை தொடங்க எளிய வழிமுறைகள்:
  • எஸ்பிஐ இன்ஸ்டா பிளஸ் சேமிப்புக் கணக்கை தொடங்க முதலில் YONO விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.
  • அதில் புதிய சேமிப்பு கணக்கு என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் புதிய சேமிப்பு கணக்கு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது “வித்அவுட் கிளை விசிட்” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க உள்ள கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!

  • அதன் பின் ஆதாரில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.
  • அனுப்பப்பட்ட ஓடிபிஐ பதிவு செய்தால் உங்களுக்கான எஸ்பிஐ வங்கிக்கணக்கு திறக்கப்பட்டு விடும்.
  • எஸ்பிஐ வங்கியில் வங்கிக்கணக்கு தொடங்கியவுடன் YONO செயலியில் சென்று வீடியோ KYC செயல்முறையை முடிக்க வேண்டும்.
  • நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் வங்கி அதிகாரிகளால் சரிபார்த்த பிறகு உங்கள் கணக்கு செயல்பாட்டிற்கு வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!