தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க உள்ள கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க உள்ள கனமழை - சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க உள்ள கனமழை - சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க உள்ள கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அடுத்த 4 நாட்களுக்கும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அத்துடன் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அடுத்த 4 நாட்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 15.09.2022 மற்றும்‌ 16.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

18.09.2022 மற்றும்‌ 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!