ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில் மொபைல் எண் இணைக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது உங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண் மாற்றுவது எப்படி என விரிவாக பார்ப்போம்.

ஆதார் அட்டை

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபரின் அடையாள அட்டையாகவும், அனைத்து ஆவணங்களை விட முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. மேலும் அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். அதன்படி ஆதரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மற்ற அடையாள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று இடம் பெற வேண்டும்.

தற்போது ஆதாரில் உள்ள விவரங்களை மாற்ற வேண்டுமெனில் UIDAI நிறுவனம் இதனை அனுமதிக்கிறது. ஆனால் விவரங்களை புதுப்பிக்க ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே அனுமதித்துள்ளது. இதையடுத்து தற்போது நீங்கள் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமெனில் இரு வழிகளில் மேற்கொள்ளலாம். அதாவது நேரடியாகவும் ஆன்லைன் முறையிலும் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை மாற்றலாம். நீங்கள் நேரடியாக மாற்ற விரும்பினால் இதற்கு முதலில் நீங்கள் அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்கு சென்று மொபைல் எண் புதுப்பிப்பதற்கான படிவத்தை பெற்று நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்பு URN எண்ணுடன் கூடிய ஒப்புகை ரசீது ஆதார் நிர்வாகியால் உங்களுக்கு அனுப்பப்படும். இறுதியாக உங்களின் மொபைல் எண் 90 நாட்களுக்குள் மாற்றியமைக்கப்படும்.

Exams Daily Mobile App Download

ஆன்லைன் முறையில் மாற்றுவதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலில் UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது உங்களின் தொலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும். அதன்பின்பு கேப்ட்சா குறியீடு இட வேண்டும்.

3. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு “OTP” எண்ணை உள்ளிட வேண்டும்.

தமிழகத்தில் செப்.17 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

4. இந்த “OTP” எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது “Online Aadhaar Services” கீழ் கொடுக்கப்பட்டுள்ள “மொபைல் எண்ணைப் புதுப்பிக்க” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

5. அதன்பின்பு கேட்கப்படும் கேப்ட்சா குறியீடு இட வேண்டும். இதையடுத்து உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு “OTP” எண்ணை உள்ளிட வேண்டும்.

6. இதையடுத்து “OTP” எண்ணை உள்ளிட்டு “SAVE” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

7. இறுதியாக உங்களின் மொபைல் எண் 90 நாட்களுக்குள் மாற்றியமைக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!