ஒரு கப் டீ அருந்தலாமா? இன்று (மே 21) சர்வதேச தேநீர் தினம்!!

0
ஒரு கப் டீ அருந்தலாமா? இன்று (மே 21) சர்வதேச தேநீர் தினம்!!
ஒரு கப் டீ அருந்தலாமா? இன்று (மே 21) சர்வதேச தேநீர் தினம்!!
ஒரு கப் டீ அருந்தலாமா? இன்று (மே 21) சர்வதேச தேநீர் தினம்!!

மே 21 ஆம் தேதி இன்று சர்வதேச தேநீர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த தேநீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தேநீர் தினம்

உலகளவில் அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒரே பானம் எது என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் தேநீர் என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேநீர் என்பது முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு கப் தேநீர் அருந்தாமல் சிலருக்கு அந்த நாளே துவங்காது. அந்த அளவுக்கு மனிதனின் அன்றாட தேவைகளில் முக்கிய இடத்தை இந்த தேநீர் பிடித்துள்ளது. இந்த தேநீருக்கு ஒரு சிறப்பு குணம் இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

என்னவெனில் உலகின் பழமையான பானங்களில் முக்கியமாக ஒன்றாக தேநீர் கருதப்படுகிறது. அதாவது வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்னமே இந்த தேநீர் அருந்தும் கலாச்சாரம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய தேநீர் பல கலாச்சாரங்களை தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று, மே 21 ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச தேயிலை தினமானது உற்பத்தி, நுகர்வு மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தேநீரின் வரலாறை பற்றி பேசுகையில், கேமல்லியா சினென்சிஸ் (Camellia Sinensis) என்ற தாவரத்திலிருந்து தேயிலைகள் கிடைக்கிறது. தாவரமாக தோன்றியதாக கருதப்படும் இந்த தேயிலை, முதலில் வளர்ந்த இடம் அறியப்படவில்லை. முன்னதாக தேநீர் மருத்துவ குணம் கொண்டது என 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

ஒரே கல்வியாண்டில் 2 பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் – உயர் நீதிமன்றம் மறுப்பு!!

பின்னர், 2015 ஆம் ஆண்டில் சர்வதேச தேயிலை தினத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்த இந்திய அரசு, ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்புக்கு முன்மொழிந்தது. தேநீர் அருந்துவதால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது என மக்களிடம் பொதுவான கருத்துக்கள் எழுந்து வந்தாலும், அவை பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என ஆய்வு தகவல் கூறுகிறது. இனி தைரியமாக தேநீர் அருந்தி தேநீர் தினத்தை கொண்டாடலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!