சர்வதேச செய்திகள் – ஜூன் 2019

0

சர்வதேச செய்திகள் – ஜூன் 2019

இங்கு ஜூன் மாதத்தின் சர்வதேச செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூன் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூன் 2019

சர்வதேச செய்திகள்

அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணிசவுதி அரேபியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது

 • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் சவூதி இந்திய தூதரகம் தூதரக காலாண்டு ஆணையம் மற்றும் சவுதி சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்புடன் இணைந்து ‘அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணியை ‘ ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய வம்சாவளியை சார்ந்தவர்  இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலக வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

 • வெளிநாட்டு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் முதன்மை பொருளாதார வல்லுனராக குமார் ஐயர் இங்கிலாந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் FCO நிர்வாகத்தில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நபர் ஆவார்.

 ரஞ்சித் சிங்கின் சிலை லாகூரில் திறந்து வைக்கப்பட்டது

 • மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை அவரது 180வது ஆண்டு நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் லாகூரில் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொள்ள சுமார் 500 பேர் வாகா எல்லையைக் கடந்து சென்றனர். முக்கிய விழா குருத்வாரா தேரா சாஹிப்பில் நடைபெறும். இந்த சிலை ஃபக்கீர் கானா அருங்காட்சியகத்திற்கும் சர்க்கார் கல்சா அறக்கட்டளைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக அமைக்கப்பட்டதாகும்.

 டாக்காவில் பிம்ஸ்டெக் தினம் கொண்டாடப்பட்டது

 • வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) குழுவின் ஏழு நாடுகளின் உறுப்பினர்கள் டாக்காவில் பிம்ஸ்டெக் தினத்தை கொண்டாடினர்.

ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சரவை “2031 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்வாழ்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது”

 • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, 2031 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்வாழ்வு திட்டத்தை அபுதாபியில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக் கொண்டது. கொள்கை வகுப்பதற்கான செயல்முறைக்கு உதவும் ‘தேசிய நல்வாழ்வு ஆய்வுமையம்’ உருவாக்குவது என்பது இந்த முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாகும்.
 • இது நல்வாழ்வுக்கு ஒருங்கிணைந்த கருத்துகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது யுஏஇ பார்வை 2021 [UAE Vision 2021] மற்றும் யுஏஇ நூற்றாண்டு 2071 [UAE Centennial 2071]க்கு ஆதரவாக உள்ளது. இது தனிநபர்கள், சமூகம் மற்றும் நாடு ஆகிய மூன்று முக்கிய நிலைகளான தேசிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

கனடா நாட்டில் 2021ம் ஆண்டு முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள் தடை

 • கனடா நாட்டின் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடியூ ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த 2021 ம் ஆண்டு முதல் தடை செய்வதாக அறிவித்துள்ளார். சுமார் 70 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளான ஒற்றை பயன்பாட்டு பொருட்கள் கடல் சூழலை மாசுபடுத்துகின்றன.
 • கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து கியூபெக்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உலகின் பெருங்கடல்களில் மாசு ஏற்படுவதற்கு  எதிராக ஒரு புதிய சாசனம் ஏற்படுத்தினர். அமெரிக்காவும் ஜப்பானும் இந்த ஒப்பந்தத்தில் சேரவில்லை.

சீனா இணையதளத்தை ‘தூய்மைப்படுத்த’ பிரச்சாரத்தைத் தொடங்கியது

 • சீனா தனது இணையதளத்தை சுத்தம் செய்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்திய நாட்களில் அதிகாரிகள் அதிக வெளிநாட்டு ஊடக வலைதளங்களை தடுத்துள்ளனர் மற்றும் சமூக ஊடகங்களில் உள்நாட்டு கணக்குகளை முடக்கியுள்ளனர்.
 • இந்த பிரச்சாரம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அல்லது தனிப்பட்ட  தகவல்களை திருடுதல்  போன்ற தங்கள் கடமையை நிறைவேற்ற தவறிய  “சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள்”  மேற்கொண்ட வலைதளங்களை தண்டித்து அம்பலப்படுத்தவும் உள்ளது. இந்த பிரச்சாரம் சில வலைதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை தடை செய்கின்றன.

கியூபாவுக்கு பயணம் செய்வதில் முக்கிய புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளன

 • கியூபாவைப் பார்வையிடும் குடிமக்கள் மீது அமெரிக்கப் புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது , குரூஸ் கப்பல்களைத் தடைசெய்துள்ளது மேலும்  அதிகமான கல்வி பயணிகள் செல்வதையும் தடைசெய்து , கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மேலும் தனிமைப்படுத்தும்  முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது .
 • குரூஸ் கப்பல்களை அமெரிக்கா இனி கியூபாவுக்கு பயணிக்க அனுமதிக்காது மேலும் தீவுக்கு “மக்களுக்கு மக்கள்” என்றழைக்கப்படும் கல்வி மற்றும் கலாச்சார பயணங்களையும்  தடைசெய்துள்ளது  குரூஸ் கப்பல்களோடு சேர்ந்து தனியார் விமானங்கள் மற்றும் படகுகளையும்  தடைசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.

 .சி.., யூஏஇயின் முதல் நிரந்தர குடியிருப்புகோல்டன் கார்ட்‘- அபுதாபியில் வெளியிட்டது

 • முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் தகுதி வாய்ந்த தனிநபர்களை ஈர்க்கும் பொருட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியிருப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ஐ.சி.ஏ) யூஏஇ-யின் முதல் நிரந்தர குடியிருப்பு ‘கோல்டன் கார்ட்’-ஐ அபுதாபியில் வெளியிட்டது.

டிஸுகோ[Dzükou] பள்ளத்தாக்கு பிளாஸ்டிக் இல்லா மண்டலம் ஆகிறது

 • நாகலாந்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, டிஸுகோ பள்ளத்தாக்கு பிளாஸ்டிக் இல்லா மண்டலமாக மாறியுள்ளது. மிகவும் பாராட்டப்படக்கூடிய முன்முயற்சியான இந்த அழகிய பள்ளத்தாக்கை ‘பிளாஸ்டிக்-இல்லா மண்டலம்’ ஆக அறிவித்தது, தெற்கு அங்கிமி இளைஞர் அமைப்பால் எடுக்கப்பட்ட முயற்சியாகும் (SAYO). இந்த அமைப்பு சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பதற்காக உறுதிமொழி எடுத்துள்ளது.

ஆசியாபசிபிக் பிராந்தியத்தின் 45 நாடுகளில் பங்களாதேஷ் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்தது

 • ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) படி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 45 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக பங்களாதேஷ் உருவெடுத்துள்ளது. 2018-19 நிதியாண்டில் பங்களாதேஷ்9% வளர்ச்சி அடைந்துள்ளது, இது 1974 முதல் அதன் வேகமான வீதமாகும். அடுத்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்று வங்கி கணித்துள்ளது.

அல்ஜீரியாவின் அரசியலமைப்பு கவுன்சில் ஜனாதிபதித் தேர்தல்களை ரத்துசெய்கிறது

 •  அல்ஜீரியாவின் அரசியலமைப்பு மன்றம் இடைக்கால ஜனாதிபதி அப்தல்காடர் பென்சிலாவின் அதிகாரங்களை நீட்டித்தது. அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் அரசியலமைப்பு குழுவால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகர்த்ததால்  அரசியலமைப்பு கவுன்சில்  ஜனாதிபதி தேர்தல் நடக்காது என்று கூறினார்.

ரஷ்யா முதல் ஆர்க்டிக் ரயில் சேவையை தொடங்குகியுள்ளது

 • ரஷ்யாவின் முதல் சுற்றுலா ரயில் சேவை ஆர்க்டிக் இருந்து நோர்வே வரை செல்லும் ரயிலில் சுமார் 91 பயணிகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கியது. இரயிலுக்கு “Zarengold”  என பெயரிடப்பட்டுள்ளது,இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையத்திலிருந்து  Petrozavodsk, Kem மற்றும் Murmansk வழியாக நோர்வே சென்றடைகிறது.

ஒரு திறந்த இந்திய பசிபிக் பகுதியை அமைக்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் & அமெரிக்கா  அழைப்பு

 • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் மூத்த அதிகாரிகள் ஒரு திறந்த இந்திய பசிபிக் பகுதி அமைவதற்காக பாங்காக்கில் சந்தித்துப் பேசினர். இலவச திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியத்திற்கான முயற்சிகளுக்கு ஆலோசனை வழங்கவும், இப்பகுதியில் விதிகள் அடிப்படையிலான உத்தரவைக் காப்பாற்றுவதற்கும், ஊக்குவிப்பதற்கும் தங்கள் பங்கிற்கு உறுதியளித்துள்ளனர்.
 • சீனா கிட்டத்தட்ட அனைத்து தென் சீனக் கடலையும் தனது எனக் கூறிவரும் அதே வேளையில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூணை மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் தனது எனக் கோருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானிய தூதர்களுக்கு வழங்கிய சிறப்பு வரி விலக்கை திரும்பப்பெற்றது அமெரிக்கா

 • பாகிஸ்தானிய தூதர்களுக்கு வழங்கிய சிறப்பு வரி விலக்கை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. டிரம்ப் நிர்வாகம் அவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகள் விதித்து ஒரு வருடம் முடிந்தநிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .
 • தூதர்களுக்கு வழங்கும் வரி விலக்கு திட்டமானது பொதுவாக வெளிநாட்டு தூதர்கள் மற்றும் தூதரகங்களுக்கு வழங்கப்படுகிறது. இது அமெரிக்காவில் நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த வெளிநாட்டு அதிகாரிகளுக்கான விற்பனை மற்றும் பயன்பாடு, உணவு, பயன்பாடு மற்றும் பிற வரி விலக்குகளை வழங்குகிறது.

 சீனாவின் மிகப் பெரிய பிக்காசோ கண்காட்சி

 • சீனாவில் மிகப்பெரிய பிக்காசோ கண்காட்சி நடைபெற்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட படைப்புகளை உள்ளடக்கியது, அவற்றில் பல பிக்காசோவின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்து வந்தவை ஆகும். சிறப்புப் படைப்புகளில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவற்றுடன் பார்சிலோனா மற்றும் பாரிஸில் உள்ள இளம் பப்லோவின் புகைப்படங்களும் அடங்கும். சீனாவில் முதல் பிக்காசோ கண்காட்சி 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது.

 55 ஆசிய-பசிபிக் நாடுகள் யு.என்.எஸ்.சி.யில் நிரந்தரமற்ற இடத்திற்கான இந்தியாவின் முயற்சியை ஒருமனதாக ஆதரித்தன

 • ஐக்கிய நாடுகள் சபையில் ஆசிய-பசிபிக் குழுவின் ஐம்பத்தைந்து நாடுகள் 2021-2022 இரண்டு ஆண்டு காலத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற இடத்திற்கு இந்தியாவின் வேட்புமணுவிற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தன.
 • இப்போது வரை, இந்தியா ஏழு முறை 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-92 மற்றும் மிக சமீபத்தில் தூதர் திரு. ஹர்தீப் சிங் பூரி தலைமயில் 2011– 2012 வரை ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்து வருகிறது.

ஜீரோ சான்ஸ்பிரச்சாரம்

 • படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அரசு ‘ஜீரோ சான்ஸ்’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
 • இப்பிரச்சாரமானது நாட்டிற்குள் நுழைய விரும்பும் அகதிகள் மீள்குடியேற்ற திட்டங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மேலும் ஆஸ்திரேலியா அரசு UNHCR உடன் இணைந்து அந்நபர்களை அடையாளம் காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்ற சபை  “ரஷ்யாவின்” வாக்குரிமையை திரும்ப அளித்தது

 • கிரிமியன் தீபகற்பத்தை சட்டவிரோதமாக இணைத்தமை தொடர்பாக ரத்து செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், ரஷ்யாவின் வாக்களிக்கும் உரிமைகளை திரும்ப அளிப்பதற்கு ஆதரவாக ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்ற சபை வாக்களித்துள்ளது. உக்ரேனிலிருந்து கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், சட்டமன்றம் 118 ஆதரவாகவும், 62 க்கு எதிராகவும் வாக்களித்தது. .

இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் அமைதி காக்கும் குழு காங்கோவில் உள்ள ஐ .நா.வின் மிஷன் பணியில் ஈடுபடுகிறது

 • இந்தியாவில் இருந்து பெண்கள் அமைதி காக்கும் குழு ஒன்று காங்கோவில் உள்ள ஐ.நா. மிஷன் பணியில் கடமைகளை ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 20 பெண்கள் அமைதி காக்கும் படையினரைக் கொண்ட  பெண் ஈடுபாட்டுக் குழு, ஐ.நா.வின் கீழ் மிகவும் சவாலான அமைதிகாக்கும் பணிகளில் ஒன்றாக கருதப்படுகின்ற மோனுஸ்கோ என்றும் அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு உறுதிப்படுத்தல் மிஷன் காங்கோ ஜனநாயக குடியரசு இல் அதன் பணிகளைத்  தொடங்கியது

 ஐக்கிய நாடுகள் உருவாக்கிய பணமோசடி தடுப்பு தளத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது

 • ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் உருவாக்கிய புதிய பணமோசடி தடுப்பு தளத்தை வளைகுடாவில் அறிமுகப்படுத்திய முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி புலனாய்வு பிரிவு புதிய பணமோசடி தடுப்பு தளமான ‘goAML’ ஐ அறிமுகப்படுத்தியது, இது மே முதல் பதிவு செய்ய திறக்கப்பட்டுள்ளது. இதை அபுதாபியில் உள்ள யுஏஇ மத்திய வங்கியின் அதிகாரிகள் அறிவித்தனர்

அக்டோபர் 2019 க்குள் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான செயல் திட்டத்தை முடிக்க பாகிஸ்தானுக்கு FATF எச்சரிக்கை

 • பயங்கரவாத நிதியுதவி தொடர்பான தனது செயல் திட்டத்தை பாகிஸ்தான் முடிக்கத் தவறிவிட்டதாக நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) தெரிவித்துள்ளது. அக்டோபர் 2019 க்குள் பாகிஸ்தான் தனது செயல் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று FATF கடுமையாக வலியுறுத்தியுள்ளது. பணமோசடி, பயங்கரவாத நிதி மற்றும் பெருக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தரநிலைகள், கொள்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை வெளியிடுவதற்கு FATF பொறுப்பாகும்.

மேற்கு ஆசியாவில் 1,000 கூடுதல் துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

 • ஈரானுடனான பதட்டங்களின் மத்தியில் தற்காப்பு நோக்கங்களுக்காக மேற்கு ஆசியாவில் 1,000 கூடுதல் துருப்புக்களை அனுப்புவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பாட்ரிக் ஷானஹான், அப்பகுதி முழுவதும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

ஜப்பான் மீன்பிடிப்பதை அனுமதிக்க கடல் சரணாலய திட்டத்தை பலாவு மாற்றியது

 • பசிபிக் நாடான பலாவு ஒரு பெரிய கடல் சரணாலயத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை திருத்தியுள்ளது, இதன்மூலம் ஜப்பானிய மீன்பிடி படகுகள் அங்கு பகுதியளவு மீன்பிடிக்க வழிவகுக்கும். மீன்கள் உலகெங்கிலும் அதிகமாக பிடிக்கப்படுகின்றன என ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த ஆண்டு எச்சரித்தது, மேலும் பலாவ் நீண்ட காலமாக கடல் பாதுகாப்பில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறது. இந்தத்தீவு நாடு அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் 80 சதவீதத்தை – 500,000 சதுர கிலோமீட்டர் (193,000 சதுர மைல்) பரப்பளவு, தோராயமாக ஸ்பெயினின் அளவு பகுதியை – அடுத்த ஆண்டு முதல் வணிக ரீதியான மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தன்னார்வ கருணைகொலை சட்டப்பூர்வமானது

 • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தீராத நோய் மற்றும் தாங்க முடியாத வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
 • கருணை கொலைச் சட்டங்களை இயற்றிய முதல் மாகாணமாக விக்டோரியா மாறியுள்ளது. இது தாங்கமுடியாத வலியால் பாதிக்கப்பட்டுள்ள நோயுற்ற நோயாளிகளுக்கு தங்கள் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர ஆபத்தான மருந்துகளை சட்டப்பூர்வமாக தங்கள் மருத்துவரிடம் கேட்க அனுமதிக்கும்.

 முதல் பங்களாதேஷ் சர்வதேச நாடக விழா டாக்காவில் நடைபெறுகிறது

 • பங்களாதேஷின் முதல் சர்வதேச நாடக விழா டாக்காவில் உள்ள பங்களாதேஷ் ஷில்பகலா அகாடமியில் நடைபெறுகிறது. இதை பங்களாதேஷ் கலாச்சார விவகார அமைச்சர் கே.எம்.கலீத் திறந்து வைத்தார். பங்களாதேஷ் கலாச்சார விவகார அமைச்சகத்தின் முயற்சியில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்தியா, பங்களாதேஷ், ரஷ்யா, சீனா, பிரான்ஸ், வியட்நாம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த நாடக குழுக்கள் பங்கேற்கின்றன

அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ ஒப்புதல் அளித்தது

 • அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவுடனான சமீபத்திய பதட்டங்கள் இருந்தபோதிலும் புதிய வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ இறுதி ஒப்புதல் அளித்த முதல் நாடாகும். மெக்ஸிகன் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ஒரு திறந்த பொருளாதாரத்திற்கு ஆதரவாக மற்றும் அந்த பகுதியில் பொருளாதார ஒருங்கிணைப்பை இன்னும் மேம்படுத்துவதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.
 • மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் இந்த ஒப்பந்தம் மெக்ஸிகோவில் அதிக வெளிநாட்டு முதலீடு மற்றும் வேலைகளை கொண்டு வரும் என்றும், அமெரிக்க சந்தைகளை அணுக உதவும் என்றும் கூறினார். இந்த ஒப்பந்தம் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (நாஃப்டா) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது கடந்த 25 ஆண்டுகளில் மெக்சிகோவை ஏற்றுமதி செய்யும் அதிகார மையமாக மாற்ற உதவியது.

இந்த ஆண்டு இலங்கை, ஜனாதிபதி தேர்தலை நடத்த உள்ளது

 • இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறவுள்ளன. அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்ப, வாக்கெடுப்பு ஜனாதிபதி பதவி முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நடத்தப்பட வேண்டும்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் ஆவணம் நோபல் அருங்காட்சியகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது

 • ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் அருங்காட்சியகத்திற்கு 1922 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் நோபல் பரிசைப் பெற்ற பின்னர் வெளியிடப்பட்ட அவரின் சார்பியல் கோட்பாட்டைப் பற்றிய முதல் கட்டுரை பரிசாக வழங்கப்பட்டது மற்றும் அவரது அன்றைய சர்ச்சைக்குரிய சார்பியல் கோட்பாட்டைப் பற்றி விவாதித்தது. ஐன்ஸ்டீன் தென்கிழக்கு ஆசியாவில் மாநாடுகளில் கலந்துகொண்டிருந்தபோது நவம்பர் 1922 இல் எழுதப்பட்ட இந்த கட்டுரை ஒரு மாதத்திற்குப் பிறகு பிரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்ஸால் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்தது, ஆப்பிரிக்க நாடான தன்சானியா

 • தன்சானியாவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த நடைமுறை மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க ஆப்பிரிக்கா வழிவகுக்கிறது. தன்சானியாவில் பிளாஸ்டிக் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை மற்றும் பிளாஸ்டிக் பைகளை  பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) படி, இத்தகைய கட்டுப்பாடுகளை செயல்படுத்திய 34வது ஆப்பிரிக்க நாடு தன்சானியா ஆகும்.
 • உலகளாவில், 127 நாடுகளில் சில வகையான பிளாஸ்டிக் பை தடை சட்டங்கள் உள்ளன. இவற்றில் 91 நாடுகளில் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, சில்லறை விற்பனை மீது தடை உத்தரவு உள்ளது என UNEP தெரிவித்துள்ளது.

 தென்கொரியா மற்றும் இங்கிலாந்து இடையே இலவச வர்த்தக ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட ஒப்புதல்

 • அக்டோபர் கடைசியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு முன்னதாகவே இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தென் கொரியாவும் பிரிட்டனும் கொள்கை அடிப்படையில் ஒப்புதல். தென் கொரிய ஏற்றுமதியான கார் பாகங்கள் மற்றும் வாகனங்களை இந்த ஒப்பந்தம் மூலம் இலவச வர்த்தகம் செய்ய வழிவகுக்கும்.
 • 2018 ஆம் ஆண்டில், பிரிட்டனுக்கான தென் கொரிய ஏற்றுமதிகள் $ 6.4 பில்லியனாக இருந்தன, இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 1.05% ஆகும்.

Download PDF

சர்வதேச செய்திகள் Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here