அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – GPF திட்டத்திற்கான வட்டிவிகிதம் உயர்வு!!

0
அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - GPF திட்டத்திற்கான வட்டிவிகிதம் உயர்வு!!

GPF திட்டத்திற்கான வட்டிவிகிதம் 7.1% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வட்டி விகிதம் உயர்வு:

மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை பொது வருங்கால வைப்பு நிதி (GPF) திட்டத்தில் டெபாசிட் செய்து வருகின்றனர். ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறையும் மத்திய அரசு வட்டி விகிதத்தை மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை 2023-2024 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களுக்கு மதிப்பாய்வு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஜிபிஎஃப் மீதான வட்டி 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வட்டி விகிதம் 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. GPF திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!