தமிழக அரசு மருத்துவர்கள் கவனத்திற்கு – பயணத்திற்கு இனோவா கார்! உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழக அரசு மருத்துவர்கள் கவனத்திற்கு - பயணத்திற்கு இனோவா கார்! உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக அரசு மருத்துவர்கள் கவனத்திற்கு - பயணத்திற்கு இனோவா கார்! உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக அரசு மருத்துவர்கள் கவனத்திற்கு – பயணத்திற்கு இனோவா கார்! உத்தரவு பிறப்பிப்பு!

தமிழகத்தில் முக்கிய பிரமுகர்களுடன் செல்லும் மருத்துவர்கள் பயணம் மேற்கொள்ள உகந்த வகையில் இனோவா கார் வழங்க தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இனோவா கார்:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு மற்றும் அரசு ஊழியர்களுக்கு என பல்வேறு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மருத்துவத் துறையில் உள்ள அனைத்து செயல்பாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது அந்தந்த பகுதி அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த துணை மற்றும் இணை பேராசிரியர்கள் தலைமையில் ஒரு மருத்துவ குழு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.

Vijay Hazare Trophy – கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி! ரசிகர்கள் உற்சாகம்!

அவ்வாறு முக்கிய பிரமுகர்களான முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அவர்களுடன் மருத்துவ குழு செல்வதற்கு ஒரு பழைய வாகனங்கள் தரப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் செல்லும் போது பிரமுகர்களின் வாகனங்களுக்கு ஈடாக இந்த வாகனங்களால் செல்ல முடிவதில்லை. அப்படிச் செல்ல முயலும் போது அது மருத்துவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லை. ஏனெனில் கடந்த 2017ம் ஆண்டு விருதுநகரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பயணம் மேற்கொண்ட போது விபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை கோவிலில் ரூ.30000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.20 கடைசி நாள்!

அப்போதே மருத்துவர்களுக்கு உயர்தர கார் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தற்போது முக்கிய பிரமுகர்களுடன் பயணம் மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு எடுத்து கூறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்கள் இல்லாத பட்சத்தில் வாடகைக்கு எடுத்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!