இந்திய பயணிகள் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை – கனடா அரசு அறிவிப்பு!!

0
இந்திய பயணிகள் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை - கனடா அரசு அறிவிப்பு!!
இந்திய பயணிகள் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை - கனடா அரசு அறிவிப்பு!!
இந்திய பயணிகள் விமானங்களுக்கு 30 நாட்கள் தடை – கனடா அரசு அறிவிப்பு!!   

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் தடை விதித்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகரிப்பதன் காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விமானங்களுக்கு தடை:

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா செல்லும் இந்திய விமானங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கனடா போக்குவரத்து துறை அமைச்சர் உமர் அல்காப்ரா தெரிவிக்கையில், ‘இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கனடாவுக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வரும் 30 நாட்களுக்கு இந்த தடை நீடிக்கும்’ என அறிவித்துள்ளார். இந்த தடை கார்கோ போன்ற சிறிய ரக விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார். தடுப்பூசி, மருந்துகள் போன்ற அவசர தேவைகளுக்காக இந்தியாவிலிருந்து செல்லும் கார்கோ ரக விமானங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனடா சுகாதாரத்துறை அமைச்சர் பாட்டி ஹஜ்டு தெரிவிக்கையில், ‘கடந்த சில நாட்களில் விமானம் மூலம் இந்தியாவிலிருந்து கனடா வந்த 20 சதவீத பயணிகளில் 1.8 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா – 2,263 பேர் உயிரிழப்பு!!

அதே போல பாகிஸ்தானிலிருந்து கனடா வந்த பயணிகளுக்கும் அதிகளவு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். முன்னதாக இந்திய விமானங்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர பிரான்ஸ் நாட்டிற்கு வரும் பயணிகள் அனைவருக்கும் 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடா வரும் பிற நாட்டு பயணிகள் அனைவருக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் தற்போதுள்ள கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக 1,151,276 பேர் பாதிக்கப்பட்டு 23,812 பேர் பலியாகியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here