Tokyo Paralympics 2020: ஆடவருக்கான F56 வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா!!

0
Tokyo Paralympics 2020: ஆடவருக்கான F56 வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா!!
Tokyo Paralympics 2020: ஆடவருக்கான F56 வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா!!
Tokyo Paralympics 2020: ஆடவருக்கான F56 வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா!!

டோக்கியோவில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று பாராலிம்பிக்ஸ் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் :

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்திய அணி சார்பில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் தற்போது பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி வீராங்கனை அவாணி துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.

Tokyo Paralympics 2020: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவானி !!

இந்நிலையில் இன்று பாராலிம்பிக்கில் ஆடவருக்கான F56 போட்டியில் வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. அதில் பிரேசிலின் தற்போதைய சாம்பியனும், உலக சாம்பியனும், உலக சாதனையாளருமான கிளாடினி பாடிஸ்டா டாஸ் சாண்டோஸ் 45.59 மீ எறிந்து தங்க பதக்கம் வென்றார். கியூபாவின் லியோனார்டோ டயஸ் ஆல்டானா 43.36 மீ எறிந்து வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவை சேர்ந்த யோகேஷ் கத்துனியா 44.38 மீ வீசி வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார், அவர் புதுடெல்லியை பி.காம் பட்டதாரி ஆவார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு -கொரோனா தொற்று தீவிரம் எதிரொலி!

இவரது தந்தை ஒரு ராணுவ வீரர் ஆவார். இவர் தனது 8 வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். F56 வகைப்பாட்டில், விளையாட்டு வீரர்கள் முழு கை மற்றும் தண்டு தசை சக்தியை கொண்டு கலந்து கொள்வார்கள். இந்த விளையாட்டுகளில் ஆண்கள் பெண்கள் என இல்லாமல், ஒரே விளையாட்டின் கீழ் பல பிரிவுகளாக சில குறியீடுகளை கொண்டு விளையாட்டுகள் பிரிக்கப்படும். அதில் ஆண்களுக்கான F56பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸில் இந்திய அணி அதிகபட்சமாக ஒரே தொடரில் மொத்தமாகவே அதிகபட்சமாக 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!