18+ வயதினர் ஏப்ரல் 28 முதல் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கு வருகிற 28 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பதிவான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
TN Job “FB
Group” Join Now
மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பொது இடங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டேட்டா சயின்ஸ் படிப்புகளுக்கான அறிவிப்பு – ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்!!
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பேசிய பிரதமர் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார். அதற்கான முன்பதிவு செய்ய நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என செய்தி பரவி வந்த நிலையில், வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.