இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா – 354 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25, 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 354 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் :
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,24,74,773 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அடுத்த தாக்குதலாக டெல்டா வகை வைரஸ் வீரியமெடுத்து வருகிறது. இவை மீண்டும் பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் 58,89,97,805 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு – இன்றே கடைசி நாள்!
கொரோனா தடுப்பூசிகள் நல்ல பலனை அளிக்கிறது. ஆனாலும் உயிரிழப்புகள் தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 354 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,35,110 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு பணியை வேகப்படுத்தி வருகின்றனர். பொது இடங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 39,486 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,20,112 ஆக உயர்ந்துள்ளது. தற்போது குணமடைந்தோர் விகிதம் 97.68% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,19,551 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.98% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.