இந்தியாவில் ஒரே நாளில் 2020 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

0
இந்தியாவில் ஒரே நாளில் 2020 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் ஒரே நாளில் 2020 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் ஒரே நாளில் 2020 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2020 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் இதுவரை 38,14,67,646 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இடையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. அதன் பிறகு 2021 மார்ச் மாதத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியது. இது உருமாறிய கொரோனா அதிக வீரியத்துடன் பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முதல் அலையில் தப்பித்த இந்தியா, இரண்டாம் அலையில் சிக்கிக் கொண்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாமல் திணறினர்.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ரூ.10 ஆயிரம் வரை அபராதம்!

அரசுகள் அனைத்தும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. பிரதமர் அவ்வபோது மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்தகட்டமாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தற்போது வரை நாடு முழுவதும் 38,14,67,646 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2021ம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நாடு முழுவதும் 31,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,09,07,282 ஆக உள்ளது. மேலும் புதிதாக 2020 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,10,784 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 49,007 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,00,63,720 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து 4,32,778 பேருக்கு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here