சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ரூ.10 ஆயிரம் வரை அபராதம்!

0
சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ரூ.10 ஆயிரம் வரை அபராதம்!
சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ரூ.10 ஆயிரம் வரை அபராதம்!
சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ரூ.10 ஆயிரம் வரை அபராதம்!

கடந்த சில வாரமாக சென்னையில் டெங்கு பரவி வருவதால் கொசு உற்பத்தியாகும் வகையில் நீர் தேங்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னர் தற்போது பொதுமக்களுக்கு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். தற்போது கோடை காலம் முடிவடைந்து பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல ‘இ-பாஸ்’ கட்டாயம் – புதிய அறிவிப்புகள் வெளியீடு!

இதனை தடுக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி முழுவதும் கொசு உற்பத்தியாகும் வகையில் நீர் தேங்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் டெங்கு பரவலை தடுக்க 15 மண்டலங்களுக்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் நீர், குப்பை தேங்கி இருந்தால் ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி தனி குடியிருப்புகளுக்கு ரூ.100 – ரூ.200 வரையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500-ரூ.15000 வரையும், சிறு, குறு கடைகளுக்கு ரூ. 500 – ரூ. 5000, உணவகங்களுக்கு ரூ. 5000- ரூ.25,000மும்,கல் நிலையங்களுக்கு ரூ.10,000- ரூ.1 லட்சமும், நட்சத்திர ஓட்டல், தொழிற்சாலை, 5000 சதுர அடிக்கு அதிகமான புதிய கட்டுமானங்களுக்கு ரூ.1 லட்சம் – ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாடுகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here