IND vs ENG 4வது டெஸ்ட் இன்று தொடக்கம் – உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!

0
IND vs ENG 4வது டெஸ்ட் இன்று தொடக்கம் - உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!
IND vs ENG 4வது டெஸ்ட் இன்று தொடக்கம் - உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!
IND vs ENG 4வது டெஸ்ட் இன்று தொடக்கம் – உத்தேச 11 அணி & பிட்ச் ரிப்போர்ட்!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நட்சத்திர ஆல் ரவுண்டர் அஷ்வின் இப்போட்டியில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்ட் தொடர்:

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனால் மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கில் இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. 3வது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்தும் சொதப்பியதால் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதனால் அணியில் மாற்றங்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முதல் போட்டிகளில் 76 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ள ஜடேஜா பேட்டிங்கிலும் பெரிதளவில் சோபிக்கவில்லை.

BAN vs NZ T20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி!

இதனால் அவருக்கு பதில் உலகின் நம்பர் 2 பவுலர் அஷ்வின் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இஷாந்த் ஷர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்களுடன் ஓவல் டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. மறுபுறம் இங்கிலாந்து அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியில் பேட்டிங் தரவரிசையிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ரஹானேவிற்கு பதில் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு! 

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணியளவில் போட்டி தொடங்க உள்ளது. இம்மைதானம் பேட்டிங், பவுலிங் என இரண்டிற்கும் சாதகமாக இருக்கும். வானிலை நிலவரப்படி போட்டியின் கடைசி 2 நாட்களை தவிர பிற நாட்களில் மழைக்கு வாய்ப்பில்லை. அதிகபட்சம் 20 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகலாம். இதில் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுப்பது நல்ல முடிவாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முந்தைய போட்டிகளின் படி சேசிங் செய்யும் அணிகளில் 40% மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

உத்தேச 11 அணி:

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீட், டேவிட் மாலன், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ (wk), சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிரேக் ஓவர்டன், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

இந்தியா: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (wk), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!