IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு! 

0
IND vs ENG 4வது டெஸ்ட் - இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு! 
IND vs ENG 4வது டெஸ்ட் - இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு! 

IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு! 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்ர்க்கப்பட்டுள்ளார்.

IND vs ENG 4வது டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் 3 போட்டிகளின் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. தற்போது இவ்விரு அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி உலகின் பெரிய மைதானங்களில் ஒன்றான ஓவலில் நாளை (செப்.2) முதல் நடைபெறவுள்ளது.

ICC டெஸ்ட் தரவரிசை வெளியீடு – 5ம் இடத்துக்கு முன்னேறினார் ரோஹித் சர்மா!

அதற்கான வீரர்கள் தேர்வில் இரு அணிகளும் தீவிரமாக இறங்கினர். இங்கிலாந்து அணி சில மாற்றங்களுடன் வீரர்களின் பட்டியலை முன்னதாக வெளியிட்டது. இந்திய அணியை பொறுத்த வரை இன்னும் வீரர்களின் விவரம் வெளியாகவில்லை. 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 151 ரன்கள் விதியசத்தில் ஊதித்தள்ளி மலைக்க வாய்த்த இந்திய அணி கடந்த லீட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி 432 ரன்கள் குவித்த பின்னர் முன்னிலை பெற முடியாமல் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது இந்தியா.

IND vs ENG 4வது டெஸ்ட் – களமிறங்க தயாராகும் அஸ்வின்! ஹர்பஜன் சாதனையை முறியடிப்பாரா?

இதனால் இந்திய அணியில் கட்டாயம் மாற்றம் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே ஜடேஜாவிற்கு பதிலாக அஸ்வின் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் என 6 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மேலும் பிரசித் கிருஷ்ணா ஒரு நாள் அணியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தான் அறிமுகம் ஆனார். தனது வேகத்தால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சிதறடித்து இருந்ததால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

IPL 2021 : புதிதாக 2 அணிகள், குறைந்தபட்ச விலை ரூ.2000 கோடி – BCCI அறிவிப்பு!

இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், சேதேஸ்வர் புஜாரா, விராட் கோலி (C), அஜிங்க்யா ரஹானே (VC), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!