BAN vs NZ T20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி!

0
BAN vs NZ T20 போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி!
BAN vs NZ T20 போட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி!

BAN vs NZ T20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி!

பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து இடையேயான முதல் T20 போட்டியில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்று நியூஸிலாந்து அணியை ஊதித் தள்ளியுள்ளது.

BAN vs NZ T20 போட்டி:

நியூஸிலாந்து அணி சுற்றுபயணமாக பங்களாதேஷ் சென்று அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அதன் முதலாவது T20 போட்டி இன்று டாக்காவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி டாம் ப்ளண்டெல் 2 ரன்களுடனும், வில் யங் 5 ரன்களுடனும், ராசின் ரவீந்திரா ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து வெளியேறினர்.

T20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேச வீரர் தமீம் இக்பால் – ரசிகர்கள் அதிர்ச்சி!

அடித்து ஆட வேண்டிய நேரத்தில் களமிறங்கிய கேப்டன் டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் நிதானமாக ஆடினர். ஆனாலும் அவர்களின் ஆமை வேக பேட்டிங்கால் ரன் வேகம் தளன்று தான் காணப்பட்டது. இவர்கள் இருவரும் வெளியேறிய பின் அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற முடிவில் 16.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வேகத்தில் மிரட்டிய முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முகமது சைஃபுதீன், ஷாகிப் அல் ஹசன், நசும் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு முகமது நைம், லிட்டன் தாஸ் இருவரும் தலா 1 ரன்னில் வெளியேறினர். அதன் பின்னர் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் 25 ரன்கள் (33 பந்துகள்,2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. களத்தில் முஷ்பிகுர் ரஹீம் 16 ரன்கள் (26 பந்துகள், 1 பவுண்டரி) மற்றும் மக்முதுல்லா 14 ரன்களுடன் (22 பந்துகள், 2 பவுண்டரி) களத்தில் நின்று வெற்றி தேடி தந்துள்ளனர்.

IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு! 

நியூஸிலாந்து தரப்பில் அஜஸ் படேல், கோல் மெக்கோஞ்சி, ராசின் ரவீந்திரா ஆகியோர் தலா 1 விக்கெட் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!