அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்.. பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படுமா? – அச்சத்தில் கல்வியாளர்கள்!

0
அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்.. பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படுமா? - அச்சத்தில் கல்வியாளர்கள்!
அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்.. பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படுமா? - அச்சத்தில் கல்வியாளர்கள்!
அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்.. பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படுமா? – அச்சத்தில் கல்வியாளர்கள்!

மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பாதிப்புகள் குறித்த செய்திகள் அதிக அளவில் வெளியாகி, தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடப்பது குறித்த கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கொரோனா பாதிப்புகள் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த நிலையில், தீவிர கட்டுப்பாடுகளுக்கு பிறகு நோய் தொற்றின் தீவிரம் சற்று குறைந்தது. ஆனால் தொற்று பரவல் உச்சத்தில் இருந்த போது வீட்டை விட்டு யாரும் வெளியில் கூட வரமுடியாத நிலை இருந்தது. இதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் உட்பட எந்த வித தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது நடப்பு கல்வியாண்டில் ஆரம்பம் முதல் வகுப்புகள் அனைத்தும் வழக்கம் போல் நடந்து வருகின்றது.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் சமீபத்தில் சீனாவில் ஒரே மாதத்தில் சுமார் 60,000 உயிரிப்புகளை ஏற்படுத்திய கொரோனாவின் XBB.1.5 வகை தொற்று இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் தீவிர கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மருத்துவ உபகரணங்கள், போதிய அளவு ஊழியர்கள், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் போன்றவற்றை தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை குறித்த அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க முழு விபரம் உள்ளே!!

Exams Daily Mobile App Download

குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் தான் முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வுகள் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் தினசரி பாதிப்பு 100க்குள் தான் உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து நிலைமை மோசமடையும் பட்சத்தில் நடப்பு ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல்கள் எழுந்து விடுமோ என்று கல்வியாளர்கள் உட்பட துறை சார்ந்தவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது அனைவர் மத்தியில் கலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!