தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் மின்வாரிய ஊழியர்கள் விடுப்பட்ட நிலையில் தற்போது இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டது. அதன்படி இவர்களுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் அரசால் வெளியிடப்பட்டது. ஆனால் இதில் மின்வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தற்போது தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியானது 31% ஆக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜூலை 1ம் தேதி முதல் மின்வாரிய ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் தொற்று.. 65.38 லட்சம் பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி தகவல்!

Exams Daily Mobile App Download

அதன்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் இவர்களின் நிலுவைத்தொகையானது கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை கணக்கிடு செய்யப்பட்டு 2 மாதம் சேர்த்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அகவிலைப்படி பெற்று வரும் முழுநேர பணியாளர்கள், திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4 ,100 முதல் ரூ.12 ,500 பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!