தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் – வருமானம் பாதிப்பு!

0
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் - வருமானம் பாதிப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் - வருமானம் பாதிப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் – வருமானம் பாதிப்பு!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்தார். தற்போது இந்த அறிவிப்பால் நகர பேருந்துகளில் வருமானம் குறைந்து உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

நகர பேருந்து:

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற சில மணி நேரங்களில் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தினார். இந்த அறிவிப்பு மாநில பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வந்தது. கொரோனா அச்சம் காரணமாக இந்த அறிவிப்புக்கு பின் பேருந்துகள் முறையாக இயங்காத நிலையில் தமிழகத்தில் கடந்த 28ம் தேதி முதல் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கி வருகிறது.

Credit card வாங்க திட்டமிடுவோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ!

மேலும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர் தற்போது இத்தகைய அறிவிப்பால் தினசரி வருவாய் குறைந்துள்ளதாக நகர பேருந்து பணியாளர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். இது குறித்து சிவகங்கை மாவட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கூறியதாவது, அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பேருந்துகளில் டிக்கெட் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் பணியில் உள்ள நடத்துனர், ஓட்டுனர்களுக்கு அன்றாட வருவாய் படி குறைந்துள்ளதாக புலம்பி வருகின்றனர். முன்பு நாள் ஒன்றுக்கு நகர பேருந்துகளில் ரூ.10 ஆயிரம் வரை வசூலாவதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ரூ.100 படியாக கிடைக்கும். ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.2000 கூட வசூலாவதில்லை. ஆகையால் வழக்கம் போல் எங்களுக்கு வருவாய் படியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here