தமிழக அரசு ஓய்வூதியதரர்களுக்கு முக்கிய அறிவுப்பு – வீட்டில் இருந்தே உயிர்வாழ் சான்றிதழ் வழங்கல்!

0

தமிழக அரசு ஓய்வூதியதரர்களுக்கு முக்கிய அறிவுப்பு – வீட்டில் இருந்தே உயிர்வாழ் சான்றிதழ் வழங்கல்!

அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றை சமர்ப்பிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதியில் இருக்கும் தபால்காரர்கள் உதவியுடன் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்.

உயிர்வாழ் சான்றிதழ்:

தமிழக அரசு சார்பில் செயல்பட்டு வரும் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் 1 ஜூலை 2022 முதல் 30 செப்டம்பர் வரை உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டுதோறும் நேரடியாக நேர்காணல் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் நேர்காணல் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் நேரடியாக வருவதில் பல சிரமங்கள் வருகிறது. அதனால் தபால்காரர்கள் மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சென்னை நகர மண்டல அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறது.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது? கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் இதோ!

இந்த அறிவிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், மத்திய அரசின் அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த 31.5.2022 அன்று கையெழுத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்து மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது.

ஆனால் இந்த ஆண்டு மாநில அரசின் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் 7,15,761 பேர் வருகிற ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்களது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே கை விரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான சேவை கட்டணம் ரூ. 70 தபால்காரர்களிடம் செலுத்த வேண்டும். இந்த சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதியில் உள்ள தபால்காரர்களிடம் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here