GATE 2023 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வாய்ப்பை தவற விடாமல் முந்துங்கள்!

0
GATE 2023 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வாய்ப்பை தவற விடாமல் முந்துங்கள்!
GATE 2023 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வாய்ப்பை தவற விடாமல் முந்துங்கள்!
GATE 2023 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வாய்ப்பை தவற விடாமல் முந்துங்கள்!

கேட் 2023 தேர்வை பற்றி ஐஐடி அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முன்னதாக வெளியிட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி நாள் இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

GATE 2023 தேர்வு:

முதுகலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக GATE தேர்வு நடத்தப்படுகிறது. கேட் 2023 தேர்வை பம்பாய், டெல்லி, குவாஹாத்தி, காரக்பூர், மெட்ராஸ், ரூர்க்கி மற்றும் கான்பூர் ஆகிய ஏழு ஐஐடிகள் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் இணைந்து நடத்துவதால், ஒவ்வொரு ஆண்டும், அவற்றில் ஒரு நிறுவனம் தேர்வுக்கான ஏற்பாடு நிறுவனமாக செயல்படுகிறது. தற்போது 2023ம் ஆண்டிற்கான தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது. இதனால் கேட் 2023 தேர்வுக்கான அறிவிப்பை முன்னதாக ஐஐடி கான்பூர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் வெளியிட்டுள்ளது. ஐஐடி கான்பூர் கேட் 2023 தேர்விற்கான பதிவு ஆகஸ்ட் 30 அன்று தொடங்கியது. கேட் பதிவுக்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ம் தேதி ஆகும்.

இருப்பினும், மாணவர்கள் GATE 2023 இன் விண்ணப்பப் படிவத்தை தாமதக் கட்டணத்துடன் அக்டோபர் 7 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். GATE 2023 தேர்வு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12, 2023 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. 2023ம் ஆண்டுக்கான கேட் தேர்வு விண்ணப்ப கட்டணத்தை அதிகாரிகள் மாற்றியுள்ளனர். அதன்படி, பெண் தேர்வர்கள் மற்றும் SC/ST/PwD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 850, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ. 1700 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

வாட்ஸ் அப் யூசர்கள் கவனத்திற்கு – வரப்போகும் புதிய அப்டேட்! இனி குரூப் காலிங் செம்ம ஈஸி!

Exams Daily Mobile App Download

கேட் தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 வரையும், பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். தேர்வுகள் முடிந்து பிப்ரவரி 21 முதல் விண்ணப்பதாரர்கள் IIT கான்பூர் கேட் 2023 தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் பதில்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். GATE 2023 Score card மார்ச் 21 அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில உள்ளதால் தேர்வர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!