முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22

0

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 22

மைக்கேல் பரடே பிறந்த தினம் 

Michael Faraday

பிறப்பு:
  • மைக்கேல் பரடே  செப்டெம்பர் 22, 1791 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார்.
  • இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
  • இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.
  • மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார்.
  • சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர்.
  • இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.
குரு நானக் தேவ் இறந்த தினம் 

guru nanak

பிறப்பு:
  • குரு நானக் தேவ் 15 ஏப்ரல் 1469 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • குரு நானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்.

பிரபல பாரம்பரியத்தில், குரு நானக்கின் போதனைகள் மூன்று வழிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது:

  • வந்த் சக்கோ: தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்தல், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.
  • கிரட் கரோ: சுரண்டல் அல்லது மோசடி இல்லாமல், நேர்மையாக ஒரு வழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுதல்.
  • நாம் ஜப்னா: பரிசுத்த நாமத்தை ஜபித்தல், இதனால் எல்லா நேரங்களிலும் கடவுளை (இறைவன் -ஓயாத பக்தி) நினைவில் கொள்ளுதல்.

குரு நானக், கடவுளின் நாமத்தால் செய்யப்படும் வழிபாடுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் வைத்தார். ஒரு மனிதன், ஞானம் பெற்ற பெரியவர்களின் வழிக்காட்டுதலின் படி நடக்க வேண்டும் என்றும்,தன் சுய புத்தியின் அடிப்படையில் நடக்கக் கூடாது என்றும் போதித்தார்.இல்லையேல், வாழ்க்கை ஏமாற்றத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.

இறப்பு:
  • குரு நானக் 1539 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ம் நாள் இறந்தார்.

 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!