முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 7

1

ச. வெ. இராமன் பிறந்த தினம் 

  • சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) நவம்பர் 7, 1888 அன்று பிறந்தார்.
  • பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார்.

  • இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
  • ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.
  • இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
  • இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
  • இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்

இறப்பு: நவம்பர் 21, 1970.

மேரி கியூரி பிறந்த தினம் 

  • மேரி க்யூரி ஆங்கிலம்:Marie Curie
  • நவம்பர் 7, 1867 அன்று பிறந்தார்.
  • புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார்.

  • இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார்.
  • பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.
  • அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.

இறப்பு: ஜூலை 4, 1934

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!