முக்கியமான நிகழ்வுகள் மே-11

0

முக்கியமான நிகழ்வுகள் மே-11

தேசிய தொழில் நுட்ப தினம்

  • இந்தியா மே 11, 1998இல் புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது. இந்நாளை நினைவு கூற ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில் நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998ம் ஆண்டு மே 11ம் தேதி இந்தியா மூன்று அணுகுண்டு சோதனையும், மே 13ம் தேதி இரண்டு அணுகுண்டு சோதனையும் வெற்றிகரமாக நடத்தியது.
  • இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது.
  • இதனை அங்கீகரிக்கும் விதமாக மே11  தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்திலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதத்திலும், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 11, 1897ல் பிறந்தார்.

ஊர்:சிவகங்கை-தமிழ்நாடு.

By Christian Piaget [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons

சிறப்பு:

  • கவியோகி, மகரிஷி என்று போற்றப்படுபவர்.
  • இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவர்.
  • திருக்குறளை அதே ஈரடிகளில் அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார்.
  • 1968ம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

விருதுகள்:

  • 1984-தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி.
  • சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.

நூல்கள்:

  • பேரின்பம்
  • கவிக் கனவுகள்
  • அருட்செல்வம்
  • தமிழ்க் கனல்
  • பாரத கீதம்
  • அன்னை
  • இவளும் அவளும்
  • சிவானந்த ஜோதி
  • இதுதான் உலகம்
  • கல்விக்கதிர்

இறப்பு:

  • மார்ச் 7, 1990 ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!