முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-05

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன்-05

உலகச் சுற்றுச்சூழல் தினம்
By This is a work (CG or photograph) by Danilo Prudêncio Silva.My Flickr. (Feito por mim) [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], via Wikimedia Commons
  • உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day) ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் சூன் 5ம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது.
  • உலகச் சுற்றுச்சூழல் தினம் 1972ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • ஐ.நா சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.
  • எங்கு மக்கள் சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச்சூழலில் வாழ்கிறார்களோ அங்கு நன்றாக வேலை செய்வார்கள்.அங்கு வாழும் குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.
  • சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக் கூறி சுற்றுச்சூழலின் மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • 2019 Theme: Beat Air Pollution
காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாகிப் பிறந்த தினம்

பிறப்பு:

  •  ஜூன் 5, 1896ல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.
By Nishad.K.Saleem (Blog) [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html) or CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], via Wikimedia Commons

சிறப்புகள்:

  • இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர்.
  • காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.
  • மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.
  • இந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906ல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முசுலிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
  • காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • 1952ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
  • 1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.
  • இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.
  • தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.

நினைவிடங்கள்:

  • தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது.1996ல் அரசு பேருந்துக் கழகங்கள் மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது.
  • 2003ம் ஆண்டு அவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தைக் கட்டியுள்ளது.
  • காயிதே மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது.
  • காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இறப்பு:

  • ஏப்ரல் 4, 1972ல் இறந்தார்.
நிகழ்வுகள்
  • 1959 – சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
  • 1977 – செஷெல்சில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!