முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-24
தேசிய பெண் குழந்தைகள் தினம்
- ஆண்டு தோறும் இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை நாள்கொண்டாடப்படுகிறது.
- இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமநிலை, சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.
- மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது .
நோக்கம்
- மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது .
- பாலின சமநிலை மேம்படுத்துவது .
- பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது .
இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபாவின் நினைவு தினம்
(அக்டோபர் 30, 1909 – ஜனவரி 24, 1966)
- பார்சிசமூகத் இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர்.
- இவர் இந்திய அணுக்கருவியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார்.
பிறப்பு
- 1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார்.
- சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார்.
மீசான் ஆய்வு:
- 1933-ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
- 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.அத்தோடு நில்லாமல்,மேலும்செய்தஆய்வுகளால் மீசான் எனப்படும் அடிப்படைத் துகள் ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார்.
- ஐன்ஸ்டைனின்,சார்பியல்தத்துவத்திற்கான ஆய்வுச் சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது.
இறப்பு:
- 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 வயதே ஆன பாபா அகால மரணமடைந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




