முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 11

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி – 11

தாமசு ஆல்வா எடிசன் பிறந்த நாள்

பிறப்பு :

  • தாமசு ஆல்வா எடிசன் பெப்ரவரி 11, 1847 அன்று பிறந்தார்.
  • இவர் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார்.
  • இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார்.
  • திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர்.

சிறப்புகள் :

  • 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர்.
  • இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.
  • தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
  • எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார்.
  • எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

இறப்பு :

 தாமசு ஆல்வா எடிசன் அக்டோபர் 18, 1931 அன்று இறந்தார்.

நெல்சன் மான்டலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாள்

  • பிப்ரவரி 11, 1990 அன்று நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் கைதிகளாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுனுக்கு வெளியே விக்டர் வெர்ஸ்டர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!