முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 09

0

முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 09

நாகசாகி தினம்

By US government, Post-Work: User:W.wolny [Public domain], via Wikimedia Commons
  • அமெரிக்கா 1945ம் ஆண்டு ஆகஸ்டு 9 அன்று பேட் மேன் என்னும் அணுகுண்டை ஜப்பானில் உள்ள நாகசாகி என்கிற நகரத்தின் மீது வீசியது.
  • இக்குண்டு 3.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும், 4500 கிலோ எடையும், 1 கிலோ புளுட்டோனியத்தையும் கொண்டது.
  • இக்குண்டு வீசப்பட்ட சில நொடிகளில் 74000 பேர் உயிர் இழந்தனர்.
  • அணுகுண்டின் விபரீதத்தை நினைவு கூற இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம்

  • ஐ.நா. பொதுச்சபை 1994ம் ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு தீர்மானத்தில் ஆகஸ்டு 9ஐ உலக பூர்வ குடிமக்கள் தினமாக அறிவித்தது.
  • இத்தினம் 1995ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • பூர்வ குடிகளின் கலாச்சாரம் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றைக் கொடுத்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்பை தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நிகழ்வுகள்

  • 1892 –  தாமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1897 – ஈ. கிருஷ்ண ஐயர், இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர்.
  • 1911 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளர்.
  • 1909 – வி. கே. கோகாக், இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர். இவர் கன்டத்தில் எழுதி 1982ல் வெளிவந்த ‘பாரத சிந்து ராஷ்மி’ என்ற காவியத்துக்காக 1990ல் ஞானபீட விருது பெற்றவர்.
  • 1953 – திரோல், நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் பொருளியலாளர்.

இறப்புகள்

  • 1948 – எல்லப்பிரகத சுப்பாராவ், இந்திய அறிவியலாளர்.
  • 1962 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி -சுவிசு எழுத்தாளர், கவிஞர்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!