முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-22

1

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-22

உலக புவி தினம்

 • புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி,அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் 1970ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
 • ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970ம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார்.
 • அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் புவி [பூமி] நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
 • இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
 • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம்.

விளாடிமிர் லெனின் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஏப்ரல் 22,1870ல் பிறந்தார்.

இயற்பெயர்: விளாடிமிர் உலியனொவ்

[Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • லெனினை உலகப் புரட்சியாளர் என்று அழைக்கிறார்கள். ரஷ்யப் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர்.
 • ரஷ்யாவில் பொதுவுடமை அரசை நிறுவினார்.
 • சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக பதவி வகித்தார். இவர் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் சோவியத் மார்க்சியம் – லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டினை உருவாக்கினார்.
 • “லெனின்” என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று.
 • தொழிலாளர் விடுதைலை இயக்கம் என்பதை தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளை பரப்புரை செய்தார்.
 • 1895-ல் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் விடுதலையாகி வந்தது 1900ல் ஸ்பார்க் என்ற பெயரில் நாளிதழ் ஒன்றினை தொடங்கினார்.
[Public domain], via Wikimedia Commons

இறப்பு:

 • ஜனவரி 21, 1924ல் இறந்தார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here