முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 18

உலக பாரம்பரிய தினம்

  • உலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் தினமாக கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய (அ) மரபு தினமாக மாறியது. 
  • உலகம் முழுவதும் 936 இடங்கள் , பண்பாட்டு சின்னங்களாக, யுனெஸ்கோ  அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • இதில் 725 கலாச்சார இடங்களாகவும், 183 இயற்கை பாரம்பரிய இடங்களாகவும், 28 இடங்கள் இரண்டும் சேர்ந்தவையாக உள்ளன.
  • உலகில் அதிக பாரம்பரிய சின்னங்கள் கொண்ட ஏழாவது நாடாக இந்தியா உள்ளது. உலகின் மரபுரிமை சின்னங்களில் 36 இடங்கள், அழியும் நிலையில் உள்ளன.

நோக்கம்:

  • உலக பாரம்பரிய தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.

தோண்டோ கேசவ் கார்வே பிறந்த தினம்

பிறப்பு:

  • ஏப்ரல் 18, 1858 ல் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்தியாவில் மகளிர் நலனுக்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி.
  • இவரது நினைவாக மும்பையின் குயின்ஸ் சாலை மகரிசி கார்வே சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விருது:

  • கல்விச் சேவையைப் பாராட்டி, காசி இந்து பல்கலைக்கழகம் இவருக்கு 1942-ல் டாக்டர் பட்டம் வழங்கியது.
  • 1955-ல் பத்மவிபூஷண் விருது பெற்றார்.
  • 1958-ல் நூறாவது வயதில் இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
  • இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையும் வெளியிடப்பட்டது.

இறப்பு:

  • நவம்பர் 9, 1962 ல் இறந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு தினம்

பிறப்பு:

  • 14 மார்ச் 1879  ல் பிறந்தார்.

சிறப்பு:

  • பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர்.

கண்டுபிடிப்புகள்:

  • சார்புக் கோட்பாடு.
  • குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
  • ஒளி மின் விளைவு.
  • கோட்பாட்டு இயற்பியலில்  சேவை.
  • நிறைஆற்றல் சமன்மை விதி.
  • பிரௌனியன் இயக்கம்.

விருது:

  • 1921 இல் இயற்பியல் நோபல் பரிசு பெற்றார்.

ஐன்ஸ்டைனின் படைப்புகள்:

  • சிந்தனைகளும் கருத்துக்களும்.
  • உலகம் எனது பார்வையில்.
  • ஏன் பொதுவுடைமை.

இறப்பு:

  • 18 ஏப்ரல் 1955 ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!