முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 17

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 17

உலக ஹீமோபிலியா தினம்

  • உலக ஹீமோபிலியா தினம் (அ) உலக இரத்த உறையாமை தினம் ஏப்ரல் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  •  மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபிலியா நோய் உண்டாகிறது.
  • ஹீமோபிலியா என்பது ரத்தம் உறையாமல் போகும் பரம்பரை நோய்.
  •  1998 லிருந்து, ஏப்ரல் 17 ம் நாள் உலக இரத்தம் உறையாமை தினம், கடைப் பிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

  • உலக ஹீமோபிலியா அமைப்பானது சமூக இணைய தளத்தை துவங்கி, ரத்தம் உறையாமை நோயை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
  • உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
  • கனடாவின் மான்ட்ரீல் நகரில் உலக ஹீமோபிலியா அமைப்பை கடந்த 1963இல் பிராங்க் ஸ்னாபல் என்பவர் துவக்கினார்.
  • கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 17 ஆம் தேதி உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர்.ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

பிறப்பு:

  • 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்தார்.

சிறப்பு:

  • சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர்.
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

விருது:

  • 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எழுதிய நூல்கள்:

  • முதன்மை உபநிடதங்கள்
  • இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
  • இந்தியத் தத்துவம் தொகுதி I & II
  • கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
  • பகவத் கீதை விளக்க உரை
  • கிழக்கும் மேற்கும்
  • மகாத்மா காந்தி
  • இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
  • இந்திய சமயங்களின் சிந்தனை
  • சமயமும் கலாச்சாரமும்
  • சமகால இந்திய தத்துவம்
  • சமயமும் சமுதாயமும்
  • உண்மையான கல்வி

இறப்பு:

  • 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மறைந்தார்.

தீரன் சின்னமலை பிறந்த தினம்

பிறப்பு:

  • 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
  • இந்திய விடுதலைக்காக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போரிட்டவர் .
  • கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.
  • இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
  • தமிழக அரசால் நினைவு மண்டபம் கட்டபட்டது -டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது.

இறப்பு:

  • ஆங்கிலேய அரசு 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி தூக்கிலிட்டனர்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!