முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-12

0

முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல்-12

உலக விண்வெளி தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12ம் தேதி உலக விண்வெளி தினம் அல்லது உலக விண்வெளி வீரர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் விஸ்டாக் என்கிற விண்கலத்தின்மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று விண்வெளிக்குச் சென்று வந்தார்.
  • இவர் பூமியை 1 மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார்.
  • யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ம் நாள் உலக விண்வெளி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்ச்சி செய்வதாகும்.

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்

  • வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் ஏப்ரல்12ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலகெங்கும் கோடிக்கணக்கில் வீதியோரங்களில் சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நோக்கில் இத்தினம் சர்வதேச அளவில் ஏப்ரல் 12ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
  • அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here