தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவின் படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் எண் இணைப்பு பணிகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு:

நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களாக ஆதார் அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு இணைப்பதால் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதல் போன்ற தவறுகள் தடுக்கப்படும்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டை உடன் இணைக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி மட்டுமில்லாமல், தேர்தல் பணி போன்ற பல விதமான அரசு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் புதிய மின்சார கட்டணம் இன்று (செப்.10) முதல் அமல் – மின்சார வாரியம் அறிவிப்பு !

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது ஆதார் அட்டையை, வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட உத்தரவில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்கும் பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்லும் படி பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றனர். இந்த பணிகளை அனைத்து வேலை நாட்களிலும், பிற்பகல் 3 மணி முதல் கூடுதல் பணியாக ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!