முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – ஜூன் 2019
இங்கு ஜூன் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
Important Events of ஜூன்
Video – Click Here
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2019
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூன் 2019
நாள் | தினம் | முக்கிய நிகழ்வுகள் |
ஜூன் 01 | உலகளாவிய பெற்றோர்கள் தினம் | உலகளாவிய பெற்றோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2012 இல் ஐ.நா. பொதுச் சபையால் இந்த தினம் உலகெங்கும் உள்ள பெற்றோர்களை கவுரவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தகளுக்காக உயிர் தியாகம் மற்றும் முடிவில்லா அன்பு செலுத்துவதை பாராட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக குழந்தைகளுக்கு இந்த தினம் வாய்ப்பை வழங்குகிறது. |
2019 தீம் – “உங்கள் பெற்றோரை மதிக்க வேண்டும்”. | ||
ஜூன் 02 | அமெரிக்கன் இந்திய குடியுரிமை தினம் | ஜூன் 02,1924 இல், ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் இந்திய குடியுரிமைச் சட்டம் சட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த சட்டம் அமெரிக்காவில் பிறந்த அனைத்து அமெரிக்கன் குடிமக்களுக்கும் குடியுரிமை வழங்கியது , ஆயிரக்கணக்கானோர் முதலாம் உலகப் போரின் போது ஆயுதப்படைகளில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. |
ஜூன் 03 | உலக கிளப் ஃபூட் நாள் | ஜூன் 3 ம் தேதியை உலக கிளப்ஃபுட் தினமாக Ponseti International Association (PIA) அறிவித்தது . டாக்டர் இக்னேசியோ பொன்சேதி, (1914-2009) பிறந்த தினத்தை நினைவுகூறும் விதமாக இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது. இவர் கிளப் ஃபூட் நோயை குணப்படுத்தும் பொன்சேதி முறையை கண்டறிந்தவராவார் கிளப் ஃபூட் மிகவும் பொதுவான தசைக்கூட்டு பிறப்பு குறைபாடு ஆகும், இது ஒவ்வொரு வருடமும் 200,000 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, இது வளரும் நாடுகளில் 80 சதவிகிதம் ஆகும் |
ஜூன் 4 | ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம். | 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, ஐ.நா. பொதுச் சபை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 ஆம் தேதியை ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினமாக அனுசரிக்க முடிவு செய்தது. இந்த நாளின் நோக்கம் உலகெங்கிலும் உடல் ரீதியான, மன, ரீதியான துஷ்பிரயோகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலிகளை உணர்த்துவதாக உள்ளது மேலும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஐ.நாவின் உடன்படிக்கையை இந்த நாள் உறுதிப்படுத்துகிறது. வரலாற்றில் மிக விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் ஒப்பந்தமான குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஒரு உடன்படிக்கை மூலமாக ஐ.நாவின் இந்த பாதுகாப்பு வேலை செயல்படுத்தப்படுகிறது. |
ஜூன் 5 | உலக சுற்றுச்சூழல் தினம் | உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வானது 1974 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து, உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவலாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு உலக சுற்றுச்சூழல் தினமும் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்துகிற ஒரு கருப்பொருளை மையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும். 2019க்கான தீம் “காற்று மாசுபாட்டை ஒழிப்போம்”. |
ஜூன் 5 | சட்டவிரோத, குறிப்பிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம் | ஒவ்வொரு ஆண்டும் 11-26 மில்லியன் டன் மீன் இழப்புக்கு பொறுப்பற்ற மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பு நடவடிக்கைகள் தான் பொறுப்பு என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) தெரிவித்தது. இந்த தாக்கத்தை குறைப்பதற்கு, ஐ.நா. பொதுச் சபை 2015 ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கோல்14 ன் இலக்கு 4, குறிப்பாக சர்வதேச சமுதாயத்தை “சட்டவிரோத, குறிப்பிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பு நடைமுறைகளை” 2020க்குள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. |
ஜூன் 7 | உலக உணவு பாதுகாப்பு தினம் | 2018 டிசம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டபிறகு முதல் உலக உணவு பாதுகாப்பு தினம் , 2019 ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாப்படுவதற்கும் மேலும் இனி வரும் ஆண்டுகளில் கொண்டாடுவதற்கும் உலக சுகாதார நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் இணைந்து (FAO)உறுப்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளது. |
ஜூன் 8 | உலக மூளைக்கட்டி தினம் | உலக மூளைக்கட்டி தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலில் இந்த நாள் ஜெர்மன் மூளைக்கட்டி சங்கத்தால் அனுசரிக்கப்பட்டது. இது ஓர் இலாபநோக்கற்ற அமைப்பு. மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இந்த தினம் அனைத்து மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 2000ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. |
ஜூன் 8 | உலக பெருங்கடல் தினம் | ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ம் தேதி உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வை குறித்து 1992ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. மாநாட்டில் கனடா முதன்முறையாக கோரிக்கையை முன்வைத்தது. ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அன்று முதல் உலக அளவில் பெருங்கடல் திடடம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தின் நோக்கம் கடல் மீது மனித நடவடிக்கைகளின் தாக்கத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, உலகம் முழுவதும் உள்ள குடிமக்களின் ஒத்துழைப்போடு சமுத்திரங்களின் நிலையான மேலாண்மைக்கு ஒரு திட்டத்தை செயல்படுத்துவதே ஆகும். |
2019 தீம் : பாலினம் மற்றும் பெருங்கடல் | ||
ஜூன் 12 | குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் | சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 2002ல் குழந்தை தொழிலாளிகள் குறித்து உலக அளவிலான கவனத்தை ஈர்க்கவும், அதை அகற்ற தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்த குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ம் தேதி, இந்த உலக தினம் அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகள், மக்கள் சமுதாயம், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இடையே குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமையை உணர்த்தவும், அவர்களுக்கு உதவுவதற்கு என்ன செய்யலாம் என்பதை விளக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. |
2019 தீம்: Children shouldn’t work in fields, but on dreams! | ||
ஜூன் 13 | சர்வதேசவெளிறல் விழிப்புணர்வு தினம் | 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி, ஐ.நா பொது சபை A/RES/69/170 என்ற தீர்மானத்தின் படி ஜூன் 13 ஆம் தேதியை சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது . ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் 2013 ஆம் ஆண்டில் வெளிறல் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் தாக்குதல்கள் மற்றும் அவர்களின் பாகுபாடு குறித்த பிரச்சனைகளுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. |
சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் 2019 தீம் – “Still Standing Strong” | ||
ஜூன் 14 | உலக இரத்த தான தினம் | இரத்த தானம் செய்பவர்களைக் கொண்டு உலகமெங்கும் அனைத்து பகுதிகளிலிருக்கும் மக்களிடையே இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வையும், இரத்த பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் அளித்து தன்னார்வத்தோடு இரத்த தானம் செய்ய முன் வருபவர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்தோடும், தரமான பாதுகாப்பான இரத்த தட்டுணுக்கல் எல்லா தனிநபர்களுக்கு சமூகங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கதோடும் ஜூன் 14 தேதி ஜூன் 14 – உலக இரத்த தான தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. |
உலக இரத்த தான தினத்தின் 2019 தீம்: “அனைவருக்கும் பாதுகாப்பான இரத்தம்” | ||
ஜூன் 15 | உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள் | ஐ.நா. பொதுச் சபை அதன் தீர்மானம் 66/127 ல் ஜூன் 15 ம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினமாக நியமித்தது .இது உலகெங்கிலும் நம் பழைய தலைமுறையினருக்கு அவமதிப்பு மற்றும் துன்பம் தருவதை எதிர்த்து நிற்கக்கக்குடிய நாளாகும். முதியோர் அவமதிப்பு என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முதியவர்களின் சுகாதார மற்றும் மனித உரிமைகளை பாதிக்கும் ஒரு உலகளாவிய சமூகப் பிரச்சினை மற்றும் சர்வதேச அளவில் சமூகத்தின் கவனத்திற்குத் தகுதியான ஒரு பிரச்சினை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாகுதலைஎதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச முயற்சிகளைக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து தரங்களுடனும் சிக்கல்களைத் தீர்த்தல், வலுவான சமூக ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு மூலமே நில சீரழிவு பிரச்சனையில் நடுநிலை என்பது அடையமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாகும் இந்த தினம் |
2019 தீம் “எதிர்காலத்தை ஒன்றாக வளர்ப்போம்” | ||
ஜூன் 16 | உலக கடல் ஆமை நாள் | உலக கடல் ஆமை தினம் ஜூன் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. கடல் ஆமைகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன மற்றும் அவை ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு முக்கியமானவை, கடல் சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் ஆமைகளின் ஏழு வகைகளும் இனப்பெருக்கம் மற்றும் உயிர்வாழ்வதற்காக பெருங்கடல்கள் மற்றும் நிலங்களின் ஆரோக்கியத்தை சார்ந்து உள்ளன. காலநிலை மாற்றம், மாசுபாடு, வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் ஆகியவை அவைகளை அச்சுறுத்தும் நிலையில் உள்ளன, பல வகையான கடல் ஆமைகள் அழிவுக்கு நேராக தள்ளப்பட்டுவருகின்றன. |
ஜூன் 16 | வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கான சர்வதேச தினம் | வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கான சர்வதேச தினம் (ஐ.டி.எஃப்.ஆர்) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (A/ RES/ 72/281) இந்த தீர்மானத்தின் படி ஏற்றுக்கொண்டு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அனுசரிப்பு ஆகும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16 அன்று கொண்டாடப்படுகிறது. |
ஜூன் 17 | உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள் | ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாகுதலைஎதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச முயற்சிகளைக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து தரங்களுடனும் சிக்கல்களைத் தீர்த்தல், வலுவான சமூக ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு மூலமே நில சீரழிவு பிரச்சனையில் நடுநிலை என்பது அடையமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாகும் இந்த தினம். 2019 தீம் “எதிர்காலத்தை ஒன்றாக வளர்ப்போம்” |
ஜூன் 18 | நிலையான காஸ்ட்ரோனமி தினம் | ஐ.நா பொதுச் சபை 21 டிசம்பர் 2016 அன்று அதன் தீர்மானம் A / RES / 71/246 ஐ ஏற்றுக்கொண்டு ஜூன் 18 ஐ சர்வதேச அனுசரிப்பான, நிலையான காஸ்ட்ரோனமி தினமாக நியமித்தது. காஸ்ட்ரோனமி என்பது உணவுக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான உறவு, தயாரிக்கும் கலை மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் சமையல் பாணிகள் மற்றும் நல்ல உணவின் அறிவியல் பற்றிய ஆய்வு ஆகும். |
ஜூன் 19 | உலக சிக்கில் செல் நாள் | சிக்கில் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி உலக சிக்கில் செல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. சிக்கில் செல் நோய் (எஸ்சிடி) என்பது மரபு மரபணு ரீதியான ஹீமோகுளோபினின் (சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஆக்ஸிஜனைச் சுமக்கும் புரதம்) குறைபாடு ஆகும். இந்த குறைபாடானது சிறிய இரத்த நாளங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி உடலின் சில பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டுசெல்வது மற்றும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. |
ஜூன் 20 | உலக அகதிகள் தினம் | ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) உலக அகதிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. துன்புறுத்தல், மோதல் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களின் கட்டாயத்தின் கீழ் தாய்நாட்டை விட்டு வெளியேறிய பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளின் தைரியம், வலிமை மற்றும் உறுதியை மதிப்பதற்காக இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. |
2019 தீம்: # StepWithRefugees — Take A Step on World Refugee Day | ||
ஜூன் 20 | உலக உற்பத்தித்திறன் நாள் | ஜூன் 20 உலக உற்பத்தித்திறன் நாளில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் உற்பத்தித்திறனைக் கொண்டாடுகிறார்கள் .இந்த நாள், எல்லா இடங்களிலும் உள்ள மக்களை அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஊக்குவிக்கிறது. உற்பத்தித்திறன் தொடர்பான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.உலக உற்பத்தித்திறன் தினத்தின் நோக்கம், சிறந்த வாழ்க்கையை நடத்துவதற்கு உற்பத்தித்திறன் எவ்வாறு முக்கியமானது என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதாகும். |
ஜூன் 21 | சர்வதேச யோகா தினம் | டிசம்பர் 11, 2014 அன்று, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக 69/131 தீர்மானத்தின் மூலம் அறிவித்தது. யோகா பயிற்சி செய்வதன் பல நன்மைகள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை சர்வதேச யோகா தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. யோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பண்டைய உடல், மன மற்றும் ஆன்மீக பயிற்சி. ‘யோகா’ என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது மற்றும் உடல் அல்லது நினைவின் ஒன்றிணைப்பைக் குறிக்கும் வகையில் இணைவது அல்லது ஒன்றுபடுவது என்பதாகும். |
2019 தீம்: காலநிலை நடவடிக்கை. | ||
ஜூன் 21 | உலக இசை தினம் | இசை தினம் என்பது இணைக்கப்பட்ட இலவச பொது நிகழ்வுகளின் தொகுப்பாகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 120 க்கும் மேற்பட்ட நாடுகளிலும், உலகெங்கிலும் உள்ள 700 நகரங்களிலும் இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இது 1982 இல் பிரான்சில் உருவானது. |
ஜூன் 21 | கோடைகால கதிர்த்திருப்பம் | கோடைகால கதிர்த்திருப்பம் ஜூன் 21 அன்று உள்ளது, இது பூமத்திய ரேகைக்கு வடக்கே வாழும் எவருக்கும் 2019 இன் மிக நீண்ட நாளாக இருக்கும். சூரியன் நேரடியாக கடக ரேகைக்கு அல்லது 23.5 டிகிரி வடக்கு அட்சரேகைக்கு மேல் இருக்கும்போது கோடைகால கதிர்த்திருப்பம் ஏற்படுகிறது |
ஜூன் 25 | மாலுமிகள் தினம் | 2010 ஆம் ஆண்டில், ஐ.நா வின் சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐஎம்ஓ), ஜூன் 25 ஆம் தேதியை மாலுமிகள் தினமாக நியமிக்க முடிவு செய்தது, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அனைத்தும் கடல் போக்குவரத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அங்கீகரிப்பதற்கான ஒரு வழியாகும். உலகப் பொருளாதாரம் மற்றும் சிவில் சமூகத்திற்கு பங்களித்தமைக்காகமற்றும் தங்கள் வேலைகளில் இருக்கும்போது அவர்கள் தாங்கும் அபா யங்கள் மற்றும் தனிப்பட்ட செலவுகளுக்காக மாலுமிகளுக்கு நன்றி தெரிவிப்பதே அன்றைய நோக்கம்; |
2019 campaign – I Am On Board with gender equality | ||
ஜூன் 26 | போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாள் | 7 டிசம்பர் 1987 இன் 42/112 தீர்மானத்தின் மூலம், போதைப்பொருள் இல்லாத ஒரு சர்வதேச சமுதாயத்தின் இலக்கை அடைய நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக ஜூன் 26 ஐ போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கடைபிடிக்க பொதுச் சபை முடிவு செய்தது. இந்த உலகளாவிய அனுசரிப்பு சட்டவிரோத மருந்துகள் சமூகத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. |
ஜூன் 27 | மைக்ரோ,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் | சிறு நிதி மற்றும் கடனுக்கான சிறு வணிக அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த பொதுச் சபை, ஜூன் 27 ஐ மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன தினமாக நியமிக்க முடிவு செய்தது. சிறு வணிகத்தை ஆதரிப்பதற்கான விழிப்புணர்வையும் செயல்களையும் அதிகரிப்பதன் மூலம், இந்த நாளைக் கடைபிடிக்க வசதியாக உறுப்பு நாடுகளை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோள். இந்த தீர்மானத்தை அர்ஜென்டினாவின் தூதுக்குழு அறிமுகப்படுத்தியது, 54 உறுப்பு நாடுகளால் இணை அனுசரணை வழங்கப்பட்டு, ஏப்ரல் 6, 2017 அன்று 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையால் வாக்களிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. |
ஜூன் 29 | வெப்பமண்டல சர்வதேச நாள் | வெப்பமண்டலங்களின் அசாதாரண பன்முகத்தன்மையை நினைவுகூரும் வகையில் வெப்பமண்டல சர்வதேச தினம் கொண்டாடபடுகிறது, அதே நேரத்தில் வெப்பமண்டல நாடுகள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இது வெப்பமண்டலங்களில் முன்னேற்றத்தை எடுத்துக்கொள்வதற்கும், வெப்பமண்டல கதைகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், பிராந்தியத்தின் பன்முகத்தன்மை மற்றும் திறனை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. |
ஜூன் 29 | தேசிய புள்ளிவிவர தினம் | சமூக பொருளாதார திட்டமிடல் மற்றும் கொள்கை வகுத்தல் ஆகியவற்றில் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஜூன் 29 அன்று இந்தியா முழுவதும் தேசிய புள்ளிவிவர தினம் அனுசரிக்கப்பட்டது. தேசிய புள்ளிவிவர அமைப்பை நிறுவுவதில் செய்த மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜூன் 29 ஆம் தேதி பேராசிரியர் பி சி மஹலானோபிஸின் பிறந்த நாளில் இது கொண்டாடப்படுகிறது. |
2019 புள்ளிவிவர தினம், 2019 இன் தீம் “நிலையான அபிவிருத்தி இலக்குகள் (எஸ்டிஜிக்கள்)”. | ||
ஜூன் 30 | சர்வதேச சிறுகோள் தினம் | ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை டிசம்பர் 2016ல் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஜூன் 30ஐ சர்வதேச சிறுகோள் தினமாக அறிவித்தது. “1908 ஜூன் 30 அன்று ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள சைபீரியாவில் ஏற்பட்ட துங்குஸ்கா தாக்கத்தின் ஆண்டு நிறைவை சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கவும், பொதுமக்களுக்கு சிறுகோள் தாக்க அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது’’. சர்வதேச சிறுகோள் தினம், சிறுகோள் தாக்க அபாயத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, புவியருகு விண்பொருட்கள் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலக அளவில் எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி தகவல்தொடர்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. |
Download PDF
Current Affairs 2019
Video in Tamil
பொது அறிவு பாடக்குறிப்புகள்
To Follow Channel – Click Here